அரசு பள்ளி மாணவ மாணவியர்களின் திறனை கண்டறிவதற்கும் அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் 2023-2024 - ஆம் கல்வியாண்டு முதல் தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத்தேர்வு நடத்தப்படவுள்ளது .
அரசுப் பள்ளிகளில் மாநிலப் பாடத் திட்டத்தின்கீழ் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் . இத்தேர்வில் 1000 மாணாக்கர்கள் ( நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடு பின்பற்றி 500 மாணவர்கள் 500 மாணவியர்கள் ) தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு உதவித்தொகையாக ஒரு கல்வியாண்டிற்கு ரூ .10,000 / - ( மாதம் ரூ .1000 / - வீதம் ஒரு கல்வியாண்டிற்கு 10 மாதங்களுக்கு மட்டும் ) இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும் தமிழ்நாடு அரசின் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளின் கணிதம் , அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் உள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் இருதாள்களாக தேர்வு நடத்தப்படும் . ஒவ்வொரு தாளிலும் 60 கேள்விகள் இடம்பெறும் , முதல் தாளில் கணிதம் தொடர்புடைய வினாக்கள் 60 இடம்பெறும் . இரண்டாம் தாளில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தொடர்புடைய வினாக்கள் 60 இடம்பெறும் .
முதல் தாள் காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரையிலும் , இரண்டாம் தாள் பிற்பகல் 2.00 மணி முதல் 4.00 மணி வரையிலும் நடைபெறும் . 18.08.2023 . 23.09.2023 ( சனிக்கிழமை ) அன்று நடைபெறவுள்ள இத்தேர்விற்கு 2023-2024 . ம் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் , விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது . மாணவர்கள் விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 07.08.2023 முதல் 18.08.2023 வரை பதிவிறக்கம் செய்து . பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகையாக ரூ .50 / - சேர்த்து மாணவர் பயிலும் பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது .
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் .18.08.2023
TN CM Talent Search Examination - Details - Download here
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி