தமிழ்நாட்டில் இருந்து தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ள 2 ஆசிரியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 27, 2023

தமிழ்நாட்டில் இருந்து தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ள 2 ஆசிரியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

 

தமிழ்நாட்டில் இருந்து தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ள 2 ஆசிரியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமாருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். தென்காசி வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை மாலதிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2023ஆம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தில் இருந்து 2 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் 5ஆம் தேதி டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல், ஒவ்வொரு ஆசிரியர் தினத்திற்கும் இந்தியாவில் சிறப்பாக பணிபுரிந்து சேவையாற்றிய 50 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படும்.


இந்த ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இந்தியா முழுவதில் இருந்தும் 50 ஆசிரியர்கள் இந்த விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதில் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார், தென்காசி வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை மாலதி ஆகியோர் தேர்வு செய்யபட்டுள்ளனர். நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ள 2 ஆசிரியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விட்டர் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி