பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 28.08.2023
Aug 28, 2023
School Morning Prayer Activities - 28.08.2023
திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம்:அருளுடைமை
குறள் :247
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.
விளக்கம்:
பொருள் இல்லாதவர்க்கு இப்பூவுலக இன்பம் இல்லாதது போலவே, அருள் இல்லாதவர்க்கு மேல் உலக இன்பம் இல்லை.
பழமொழி :
Better go to bed sleepless than rise in debt
கடனில்லா சோறு கால் வயிறு போதும்
இரண்டொழுக்க பண்புகள் :
1. சாதாரண மாணவனையும் சாதனையாளராக மாற்றுவது முயற்சியும் பயிற்சியுமே
. 2. எனவே முயற்சி, பயிற்சி இரண்டையும் பாதியில் விடமாட்டேன்.
பொன்மொழி :
ஒருபோதும் முயற்சியை கைவிடாதீர்கள்
இன்று கடினமாக உள்ளது
நாளை மோசமாக இருக்கும்
ஆனால் நாளை மறுநாள் சூரிய ஒளியாக இருக்கும்.
– ஜாக் மா
பொது அறிவு :
1. தமிழ்நாட்டின் பட்டாசு நகரம் என்று அழைக்கப்படுவது எது?
விடை: சிவகாசி
2. காற்றழுத்த விசைக்குழாய் நகரம் என்று அழைக்கப்படுவது எது?
விடை: கோவை
English words & meanings :
wad(n)- soft fibrous material used for padding, packing etc. தக்கை. xebec (n) - a three masted arab ship மூன்று பாய்மரங்களுடைய அரேபிய கப்பல்
ஆரோக்ய வாழ்வு :
உளுத்தம் பருப்பு: உளுத்தம் பருப்பில் அதிக அளவு நார்ச்சத்து, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உள்ளன, அவை நமது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனளிக்கின்றன.
நீதிக்கதை
ஒரு இளைஞன் வெளியூர் சென்று திரும்பும்போது பாலைவனத்தின் வழியே திரும்ப நேர்ந்தது. அப்போது ஒரு சுனையில் நீரை கண்டான்.
ஆவலுடன் ஓடிச்சென்று நீரை பருகியவன், அந்த நீரின் சுவையில் அளவற்ற மகிழ்ச்சியடைந்தான்.
குடிமக்களை சிறந்த முறையில் பரிபாலனம் செய்யக்கூடிய தனது நாட்டு மன்னனுக்கு அந்த நீரை கொடுத்தால் அவர் மிகவும் மகிழ்ச்சியடைவார் என்று கருதி, தன்னுடைய தோல் பையில் அந்த நீரை கொஞ்சம் நிரப்பிக் கொண்டான்.
நான்கு நாட்கள் பயண முடிவில் தன்னுடைய ஊரைச் சென்றடைந்தவன், அரண்மனைக்கு சென்று அரசனிடம் அந்த நீரின் அருமை பெருமைகளை கூறி, உலகிலேயே இது போல சுவையான நீர் இருக்கமுடியாது என்று கூறி, அதை அவருக்கு அளித்தான்.
மன்னன் சிறிதும் தாமதிக்காமல் மொத்த நீரையும் குடிக்க ஆரம்பித்தான்.
இதை அருகே அமர்ந்து கவனித்துக்கொண்டிருந்த பட்டத்து
ராணி, “எனக்கும் கொஞ்சம் அந்த நீரை கொடுங்களேன். எனக்கும் அதை குடிக்க ஆசையாக இருக்கிறது" என்று கூற, அவள் கூறியதை காதில் வாங்கிக்கொள்ளாமல்
மொத்த நீரையும் குடித்து
முடித்துவிட்டான் மன்னன்.
"பிரமாதம்... உண்மையில் இதுபோல ஒரு சுவையான ஒரு நீரை நான் இது வரை என் வாழ்க்கையில் அருந்தி யதேயில்லை. உனக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். நீ நீடூழி வாழ்க!" என்று வாழ்த்தி பரிசுகள் வழங்கி அனுப்புகிறார்.
இளைஞன் தனது மன்னனுக்கு அந்த அதிசய நீரை கொடுத்த சந்தோஷத்தில் விடைபெற்று சென்றான்.
அவன் சென்ற பிறகு,
ராணி"இருந்தாலும் உங்களுக்கு இத்தனை சுயநலம் ஆகாது. அந்த நீரை எனக்கும் கொஞ்சம் கொடுத்தால் என்ன குறைந்தா போய்விடுவீர்கள்? என்றாள்
“இல்லை ராணி ... நான் மொத்த
நீரையும் குடிக்கவில்லை. அதில் கொஞ்சம் நீர் இன்னும் இருக்கிறது. வேண்டுமானால் நீ கொஞ்சம் குடித்துப் பாரேன்"அரசன் சொல்ல,ஆர்வமுடன் எடுத்து குடித்தவள், ஒரு வாய் குடித்ததும்.... "சே... சே... என்ன தண்ணீர் என்ன இப்படி நாற்றமடிக்கிறது?" என்று கூறி அந்த நீரை துப்பி விடுகிறாள்.
"தேவி... நீ நீரை தான் சுவைத்தாய். ஆனால் நான் அவன் என் மீது வைத்திருந்த அன்பை சுவைத்தேன். பாலைவனத்தில் தாகமெடுத்து அலைந்து திரிந்த அவனுக்கு ஒரு சாதாரண சுனை நீரே தேவாமிர்தம் போல இருந்திருக்கிறது. அதை மன்னனாகிய எனக்கு கொடுக்கவேண்டும் என்று கருதி தனது
தோல் பையில் நிரப்பி கொண்டுவந்தான். எனவே தோலின் வாடையும் நீரில் ஏறிவிட்டது. நீரின் சுவை முற்றிலும் மாறிவிட்டது.
அவன் இருக்கும்போது நீரை உனக்கு கொடுத்திருந்தால் நீ இப்போது செய்ததைப் போலவே அவன் முன்பு செய்திருப்பாய். அவன் மனம்வேதனைப் பட்டிருக்கும். அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை.
நம்மில் பெரும்பாலானோர் பொருளின் மதிப்பைத் தான் எடைபோடுகிறோமே தவிர அதனுள் பொதிந்திருக்கும் அன்பை அல்ல. அப்படி செய்வது, சிப்பியின் உள்ளிருக்கும் முத்தை அறியாமல்
முத்துக்களை தவறவிடுவது போன்றதாகும். இனியாவது விழித்துக்கொள்ளுங்கள்!
மனித உணர்வுகளை நாம் மதிக்க கற்றுக் கொள்ளவேண்டும்.
இதயப்பூர்வமாக தரப்படும் பரிசு இதயங்களின் பரிசேயல்லாமல் வேறு ஒன்றுமில்லை.
அதே போன்று நாம் யாருக்காவது நன்றி தெரிவிக்கும்போது அவை வெறும் வார்த்தையாக நின்றுவிடாமல் செயலிலும் நன்றியை காட்டவேண்டும். அதுவே உண்மையான நன்றி.
அடுத்த முறை உங்களுக்கு யாராவது ஏதேனும் பரிசு கொடுத்தால் அதன் விலை மதிப்பையோ அது எத்தனை பெரிது என்பதையோ பார்க்காதீர்கள். அதன் பின்னணியில் உள்ள அன்பை, அந்த எண்ணத்தை பாருங்கள்.
யார் மூலம் என்ன கிடைத்தாலும் எந்த வடிவில் கிடைத்தாலும் அவர்களுக்கு மனப்பூர்வமான ஒரு 'நன்றி'கூறுங்கள்.
இன்றைய செய்திகள் - 28.08. 2023
*சந்திரயான்-3 தரையிறங்கிய இடத்திற்கு சிவசக்தி என்று பெயர் சூட்டப்பட்டது- இஸ்ரோ தலைவர் விளக்கம்.
*நிலவின் வெப்பநிலையை தொடர்ந்து கண்காணிக்கும் விக்ரம் லேண்டர் - இஸ்ரோ தகவல்.
*தேசிய நல்லாசிரியர் விருது வென்ற தமிழக ஆசிரியர்களுக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் வாழ்த்து.
*13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்.
*ஆசிய விளையாட்டுப் போட்டி இந்திய மகளிர் கால்பந்து அணி அறிவிப்பு.
*உலக பேட்மிண்டன் போட்டி : அரையிறுதியில் பிரனாய் தோல்வி- வெண்கல பதக்கம் வென்றார்.
Today's Headlines
* Chandrayaan-3 Landing Site Named Shivashakti - ISRO Chief Explains
* Vikram Lander to continuously monitor moon's temperature - ISRO info.
* Chief Minister M K Stalin congratulates the teachers of Tamil Nadu who won the National Good Teacher Award.
* Chance of heavy rain in 13 districts today - Information from Meteorological Department.
*Asian Games Indian Women's Football Team Announcement
*World Badminton Tournament: Pranai loses in semi-final - wins bronze medal.
Prepared by
Covai women ICT_போதிமரம்
Recommanded News
Tags # School Morning Prayer ActivitiesRelated Post:
School Morning Prayer Activities
Labels:
School Morning Prayer Activities
2 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
A learned scholar will love (that education itself) even more when he sees that the world is also happy with the education that causes him to be happy.
ReplyDelete2. Instead of trying to be a man of daily success, strive to be a man of value. - Albert Einstein3. A new word a day Arrest - Ask - Ask
regards: beyblade x
4. Today in History 1757 – The first rupee coin was minted in Calcutta. 1789 – William Erzell discovers Saturn's new moon, Enceladus. 1845 – The first issue of Scientific American is published. 1990 – Iraq declares Kuwait as its new province
ReplyDeleteA learned scholar will love (that education itself) even more when he sees that the world is also happy with the education that causes him to be happy.
2. Instead of trying to be a man of daily success, strive to be a man of value. - Albert Einstein3. A new word a day Arrest - Ask - Ask
4. Today in History 1757 – The first rupee coin was minted in Calcutta. 1789 – William Erzell discovers Saturn's new moon, Enceladus. 1845 – The first issue of Scientific American is published. 1990 – Iraq declares Kuwait as its new province
regards: beyblade x