தமிழ்நாடுகல்வி கற்பிக்கும் முறையில் மாற்றம் தேவை: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 3, 2023

தமிழ்நாடுகல்வி கற்பிக்கும் முறையில் மாற்றம் தேவை: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

பள்ளியில் மாணவா்களுக்கு கல்வி கற்பிக்கும் முறையில் காலத்துக்கேற்ப மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.


சென்னை ஆழ்வாா்பேட்டையில் ‘க்ரூ’ நிறுவனம் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற ‘தமிழருக்கான தமிழ்நாடு’ திட்ட தொடக்க விழாவில் அவா் பேசியது:


‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தின் மூலம் 34 லட்சத்துக்கும் மேலான மாணவா்கள் பயன் அடைந்துள்ளனா். 2 வயது குழந்தைகள் கூட தொலைபேசி போன்ற தொழில்நுட்ப பயன்பாட்டில் சிறந்து விளங்குகின்றனா்.


எழுத, படிக்க கற்றுக் கொள்வதற்கு முன்பு தொழில்நுட்பங்களை பயன்படுத்த கற்றுக் கொள்கிறாா்கள். இந்த நிலையில் பள்ளியில் மாணவா்களுக்கு பழைய முறைகளை பயன்படுத்தி கல்வி கற்பிப்பதில் எந்த ஒரு பயனும் இல்லை. காலத்துக்கேற்ப கல்வி கற்பிக்கும் முறையை மேம்படுத்த வேண்டும்.


செயல்முறை கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தற்போதைய மாணவா்கள் மீது உள்ள நம்பிக்கையில் தான் முதல்வா் மு.க.ஸ்டாலின் 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தை ஒரு டிரில்லியன் டாலா் பொருளாதார மாநிலமாக மாற்றும் இலக்கை நிா்ணயித்துள்ளாா் என்றாா் அவா்.


இந்த நிகழ்ச்சியில் ‘தமிழருக்கான தமிழ்நாடு’ திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் 1,000 பேருக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் ஒப்பந்தத்தை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம், ‘க்ரூ’ நிறுவனத் தலைவா் அனில் ஸ்ரீனிவாசன் வழங்கினாா்.


இதில், நிறுவன அறங்காவலா் கிருஷ்ணமூா்த்தி, தொழிலதிபா் சங்கா் வானவராயா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

4 comments:

  1. Oh!!! தற்காலிக ஆசிரியர்களை நியமித்தது தான் அந்த மாற்றமாக இருக்குமோ?

    ReplyDelete
  2. அறிவுகெட்ட அமைச்சர்களே தேர்தல் வாக்குறுதியில் கொடுத்ததை நிறைவேற்றுங்கள்.நீங்கள் எல்லாம் மனிதர்களா.😡😡😡😡😡😠😠😠😠😠

    ReplyDelete
    Replies
    1. உங்களை எல்லாம் என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஆசிரியர்கள் சமூக அக்கறையோடு வாக்கு அளியுங்கள். உங்கள் நலனுக்கு மட்டும் வாக்கு அளித்தால் இப்படி தான் நடக்கும். நீங்கள் எவளவு கதறுநாலும் part time ஆசிரியர்களுக்கு ஒன்றும் நடக்க போறது இல்லை.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி