தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித் தேரவுகள் மூலம் நிரப்பப்படுகின்றன. அதன்படி துணை ஆட்சியர், கூட்டுறவுச் சங்க துணைப் பதிவாளர் உட்பட குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு மாநிலம் முழுவதும் கடந்த நவம்பர் 19-ம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 1.90 லட்சம் பட்டதாரிகள் எழுதினர்.
அவர்களுக்கான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி ஏப்ரல் 28-ம் தேதி வெளியிட்டது. இதில் வெற்றி பெற்றவர்கள் அடுத்ததாக முதன்மைத் தேர்வு எழுத வேண்டும்.அந்த வகையில் குரூப் 1 முதன்மைத்தேர்வு ஆகஸ்ட 10 முதல் 13-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. கட்டாய தமிழ் தகுதி தேர்வு, பொது அறிவு, விரிவாக எழுதுதல் உட்பட 4 தாள்களாக தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான ஹால்டிக்கெட்டை டிஎன்பிஎஸ்சி தற்போது வெளியிட்டுள்ளது. அதை www.tnpsc.gov.in/, http://www.tnpscexams.in/ ஆகிய இணையதளங்களில் சென்று தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி