தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.க்கு ‘ஏ பிளஸ்’ அந்தஸ்து - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 4, 2023

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.க்கு ‘ஏ பிளஸ்’ அந்தஸ்து

 தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்துக்கு ‘ஏ பிளஸ்’ அந்தஸ்தைதேசிய தர மதிப்பீடு மற்றும் அங்கீகாரக் குழு (நாக் கமிட்டி) வழங்கியுள்ளது. இதுகுறித்து திறந்தநிலை பல்கலை. பதிவாளர் சு.பாலசுப்ரமணியன் (பொறுப்பு) வெளியிட்ட செய்திக்குறிப்பு:


திறந்தநிலை பல்கலைக்கழகம் 2002-ம் ஆண்டு தமிழக அரசால்நிறுவப்பட்டது. இது பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) 2எப், 12பி தகுதி பெற்றுள்ளது. தற்போது தொலைநிலைக் கல்விமுறையில் படிப்புகளை வழங்கும்கல்வி நிறுவனங்களில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.க்கு நாக்கமிட்டி 4-க்கு 3.32 புள்ளிகளை வழங்கியுள்ளது. இதன்மூலம் ‘ஏ பிளஸ்’ தகுதியை பெற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது.


கற்றல், கற்பித்தல், மதிப்பீடு, ஆராய்ச்சி, உள்கட்டமைப்புகள், கற்றல் வளம், மேலாண்மை, தலைமைத்துவம் உள்ளிட்ட அளவுகோல்களை மையமாக கொண்டு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


மேலும், இந்தியாவில் 16 திறந்தநிலை உயர்கல்வி நிறுவனங்களில் நாக் கமிட்டியின் தரவரிசையில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. 2-ம் இடத்தில் உள்ளது. பழங்குடியினர், திருநங்கைகள், சிறைவாசிகள், சமூகத்தில் பின்தங்கியோருக்கு உயர்கல்வி வழங்க எடுத்து வரும் முயற்சிகளுக்கும் நாக் கமிட்டி பாராட்டு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி