ஆசிரியர் சமூகம் மாணவர்கள் மனதில் சமூக நல்லுறவை விதைத்து, நன்னெறிகளை ஊட்ட வேண்டும் - முதலமைச்சர் வேண்டுகோள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 11, 2023

ஆசிரியர் சமூகம் மாணவர்கள் மனதில் சமூக நல்லுறவை விதைத்து, நன்னெறிகளை ஊட்ட வேண்டும் - முதலமைச்சர் வேண்டுகோள்!

நாங்குநேரியில் நடந்த சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது . இளம் மாணவர்களிடம் கூட சாதிய நச்சு எந்தளவுக்கு ஊடுருவி இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது . சக மனிதரை நமக்குச் சமமான ஒருவராக அடையாளம் காணாமல் சாதி வேறுபாடும் மாறுபாடும் பார்த்து வெறுப்பதும் , அத்தகைய வெறுப்பை வன்முறையாக வெளிப்படுத்துவதும் இன்னும் தொடர்வது சகிக்க முடியாததாக இருக்கிறது.


 இந்தச் சம்பவத்தில் கொடூரமாகத் தாக்கப்பட்ட மாணவர்களின் மருத்துவம் மற்றும் கல்விச் செலவை ஏற்க இருப்பதாக மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்திருக்கிறார். குற்றச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் . சட்டம் அதன் கடமையைச் சரியாகச் செய்யும் . அதே நேரத்தில் மாணவர்கள் மனதில் சமூக நல்லுறவை விதைப்பதை அனைவரும் கடமையாகக் கொள்வோம்.


குறிப்பாக ஆசிரியர் சமூகமானது , இது போன்ற நன்னெறிகளை ஊட்ட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் . வெறுப்பு மனம் கொண்டவர்களால் எந்த வெற்றியையும் அடைய முடியாது . பேசும் மொழியால் நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள் ! நமக்குள் வெறுப்புணர்வும் ஏற்றத் தாழ்வு எண்ணமும் கூடாது என்பதை இளைய சமுதாயம் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.

2 comments:

  1. அடிக்க கூடாது திட்ட கூடாது எதுவும் கேக்க கூடாது ஆன சமூக நல்லுறவை வளர்க்கணும்,,, 😂😂

    ReplyDelete
  2. மாண்பு மிகு முதல்வர் அவர்களே... நீங்கள் தங்கள் மகனுக்கும் பாடம் எடுத்து இருக்கலாம்... சாதிய திரை படத்தில் நடிக்க கூடாது என்று... ஒரு அமைச்சரா அவர்க்கும் பொறுப்பு இருக்கிறது அல்லவா

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி