இந்த செய்திக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது - தினமலர் நாளிதழ் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 31, 2023

இந்த செய்திக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது - தினமலர் நாளிதழ்

  

அரசு பள்ளி மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு அமல்படுத்தியுள்ள முன்னோடி திட்டமான காலை உணவுத்திட்டம் குறித்து , ஈரோடு - சேலம் ' ' தினமலர் ' பதிப்பில் இன்று ( ஆக . , 31 ) வெளியாகியிருக்கும் மிக அருவருக்கத்தக்க , வெட்கித் தலைகுனியக்கூடிய வகையிலான செய்திக்கும் , கி . ராமசுப்பு அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளியாகி வரும் சென்னை , மதுரை , கோவை , புதுவை , நெல்லை , நாகர்கோவில் பதிப்புகளுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.


ஈரோடு- சேலம் தினமலர் பதிப்பானது , திரு.சத்தியமூர்த்தி என்பவரை உரிமைதாரர் , வெளியீட்டாளர் மற்றும் ஆசிரியராகக் கொண்டு கடந்த , 23 ஆண்டுகளாக தனித்து இயங்கி வருகிறது.பள்ளி மாணவர்களுக்கான திட்டத்தின் உன்னத நோக்கத்தை புரிந்துகொள்ளாமல் , மிகக் கீழ்த்தரமான பார்வையுடன் செய்தி வெளியிட்டிருக்கும் ஈரோடு - சேலம் தினமலர் பதிப்பினையும் , அதற்கு காரணமான நபர்களையும் வன்மையாக கண்டிக்கிறோம் . லட்சோப லட்சம் வாசகர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கையினைப் பெற்றிருக்கும் ' தினமலர் ' பெயரிலேயே இப்படியொரு தரம்தாழ்ந்த செய்தியினை வெளியிட்டு , தினமலர் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியிருக்கும் ஈரோடு சேலம் பதிப்பின் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.


ஆசிரியர் , 

தினமலர் . சென்னை , மதுரை , கோவை , புதுவை , நெல்லை , நாகர்கோவில் பதிப்புகள் .

1 comment:

  1. அது எப்படி இந்த செய்தி மட்டும் முதலமைச்சர் கவனத்திற்கு இவ்வளவு வேகமாக சென்றடைந்து விட்டது.....
    அதிசயமாக உள்ளது.....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி