வேளாண் பல்கலையில் நாளை நேரடி கலந்தாய்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 20, 2023

வேளாண் பல்கலையில் நாளை நேரடி கலந்தாய்வு

 

கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில், 7.5 சதவீத இட ஒதுக்கீடு பிரிவு மாணவர்களுக்கு நாளை (ஆக.21) நேரடி கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.


தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இளம் அறிவியல் பட்டப்படிப்புகளுக்கு 7.5 சதவீதம் அரசு பள்ளியில் பயின்ற பொதுப்பிரிவு மற்றும் தொழில் முறைக் கல்வி பாடப்பிரிவு மாணவ, மாணவிகளுக்கான நேரடி கலந்தாய்வு நாளை மதியம் 3 மணிக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது.


பொதுப்பிரிவினருக்கு நேரடி கலந்தாய்வு வரும் 22, 23-ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. நேரடி கலந்தாய்வுக்கான காலஅட்டவணை http://tnagfi.ucanapply.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


மேலும், 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு மாணவர்களுக்கு நேரடி கலந்தாய்வில் கலந்து கொள்ள குறுஞ்செய்திகள் அந்தந்த மாணவர்களின் இ-மெயில் முகவரி, செல்போன் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.


அதை சரிபார்த்து கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும். இதில் பங்கேற்க தவறியவர்களுக்கு மறுபரிசீலனை செய்யப்பட மாட்டாது. மேலும் விவரங்களுக்கு 0422-6611345, 0422-6611346 என்ற எண்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி