School Morning Prayer Activities - 30.08.2023 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 29, 2023

School Morning Prayer Activities - 30.08.2023

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 30.08.2023

திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம்:அருளுடைமை

குறள் :248

பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது.

விளக்கம்:

பொருளை இழந்தவர் அதனை மீண்டும் தேடிப் பெறலாம். அருளை இழந்தால் இழந்ததுதான்; மீண்டும் பெற இயலாது.


பழமொழி :
Bitter is patience but sweet is its fruit

பொறுமை கசப்பானது அதன் பலன் இனிப்பு


இரண்டொழுக்க பண்புகள் :

1. சாதாரண மாணவனையும் சாதனையாளராக மாற்றுவது முயற்சியும் பயிற்சியுமே.

2. எனவே முயற்சி, பயிற்சி இரண்டையும் பாதியில் விடமாட்டேன்.

பொன்மொழி :

தயங்குகிறவன் கை தட்டுகிறான் துணிந்தவன்

கை தட்டல் பெறுகிறான்

ஜான் கென்னடி

பொது அறிவு :

1. தமிநாட்டின் எஃகு தலைநகரம் என்று அழைக்கப்படுவது எது?


விடை: சேலம்

2. கலாச்சாரத்தின் தலைநகரம் என்று அழைக்கப்படுவது எது?


விடை: தஞ்சாவூர்


English words & meanings :

 bedraggled - wet or drenched and untidy. Adjective. மிகுதியான ஈரத்தோய்வுடன் மாசு படிந்த. பெயரளபடை 


ஆரோக்ய வாழ்வு : 

உளுத்தம் பருப்பு: கருப்பு உளுந்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. கருப்பு உளுந்தை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு அந்த உளுந்தில் இருக்கும் முழுமையான சத்து ஜீரண உறுப்புகளால் கிரகிக்கப்பட்டு, செரிமான உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. 

ஆகஸ்ட் 30 இன்று

வாரன் எட்வர்ட் பஃபெட் அவர்களின் பிறந்தநாள் 

வாரன் எட்வர்ட் பஃபெட் (Warren Edward Buffett, பிறப்பு: ஆகஸ்ட் 30. 1930) ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டாளரும், தொழிலதிபரும், பொதுக் கொடையாளரும் ஆவார். உலகிலேயே மிகவும் வெற்றிகரமான முதலீட்டாளர்களில் ஒருவரான இவர் "பெர்க்சயர் ஹாதவே"[4] என்ற நிறுவனத்தில் அதிகமான பங்குகளைக் கொண்டுள்ளதோடு அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் உள்ளார். இவர் 2008 ஃபோர்ப்ஸ் பட்டியலில் உலகின் மிகப் பெரிய பணக்காரராய் இடம்பெற்றார். அவருடைய சொத்தின் மொத்த மதிப்பு $62 பில்லியன் எனக் கணக்கிடப்பட்டுள்ளது

நீதிக்கதை

பீர்பாலின் புத்திசாலித்தனம்

 காபூல் அரசருக்கு, பீர்பாலின்

அறிவாற்றலையும்,

புத்திசாலித்தனத்தையும் கேள்விப்பட்ட

அவர், பீர்பாலின் அறிவை ஆராய்ந்து

அறிய ஆவல் ஏற்பட்டது.

 அதனால், காபூல் அரசர், ஒரு கடிதம்

எழுதினார். அதில் மேன்மை தாங்கிய

அக்பர் சக்ரவர்த்தி அவர்களுக்கு,

ஆண்டவன் தங்களுக்கு நலன்கள்

பலவும், வெற்றிகள் பலவும் தருவாராக.

தாங்கள் எனக்கு ஒரு குடம் அதிசயம்

அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்னு

எழுதி கையெழுத்துப் போட்டு, தூதன்

மூலமா அக்பருக்கு அனுப்பினாரு காபூல் அரசர்.

 கடிதத்தைப் படிச்ச அக்பர் திகைச்சு, ஒரு

குடம் அதிசயம் அனுப்புவதா? ஒன்றுமே

புரியவில்லையேன்னு குழம்பி,

பீர்பால்கிட்ட கடிதத்தை காட்டினாரு.பீர்பால் சிறிது நேரம் யோசிச்சாரு.

அப்புறம், அக்பரிடம் மூன்று மாதத்தில்

அதிசயம் அனுப்புவதாக பதில் எழுதி

அனுப்புங்கள் என்றார். அக்பரும்

அதேபோல் தபால் எழுதி அனுப்பினார்.

 பிறகு அக்பர், பீர்பாலிடம், ஒரு குடம்

அதிசயம் எப்படி அனுப்புவீர்? என்று

கேட்டார்.

 அதற்கு பீர்பால், மூன்று மாதம் கழித்து

அந்த அதிசயத்தைப் பாருங்கள் மன்னா என்றார்.

 பிறகு பீர்பால் ஒரு மண் குடத்தை எடுத்து ஒரு பூசணிக்கொடியில் காச்சிருந்த பூசணிப்பிஞ்சு ஒன்றைக் கொடியுடன் மண் குடத்திற்குள் வைத்து

வைக்கோலால் குடத்ததை மூடினார்.

 சிறிது நாட்களான பிறகு பூசணிப் பிஞ்சு குடம் நிறையுமளவிற்கு குடத்திற்குள்ளேயே நன்றாக வளர்ந்து

பெருத்திருந்தது. குடத்துக்குள் இருக்கும் பூசணிக்காயை மட்டும்

வைத்துக்கொண்டு மற்றதை நீக்கி

விட்டார் பீர்பால்.

பிறகு அந்தக் குடத்தை அக்பரிடம்

காட்டினார் பீர்பால். அக்பருக்கு

ஆச்சரியம். குடத்தின் வாய் பகுதி உள்ளே இருக்கும் பூசணிக்காயைவிட மிக சிறியது. இதனுள் இவ்வளவு பெரிய பூசணிக்காயை எப்படி நுழைத்தீர்கள் எனக் கேட்டார். 

 பீர்பால் அதைப்பற்றி மன்னருக்கு

விளக்கிக் கூறினார். அந்தப்

பூசணிக்காய் குடத்தை அப்படியே காபூல் அரசருக்கு அதிசயம் என்று அனுப்பி வைக்குமாறு கூறினார்.

 குடத்திற்குள் இருக்கும் பூசணியைப்

பார்த்த காபூல் அரசர், பீர்பாலோட புத்திக் கூர்மையை எண்ணி வியப்பில்
ஆழ்ந்தார்.நீதி :

புத்திசாலியாக இருந்தால் முடியாது

என்பது கூட முடியும்.


இன்றைய செய்திகள் - 30.08. 2023

*சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூபாய் 200 குறைப்பு- மத்திய அரசு அதிரடி.

*காவிரியில் 15 நாட்களுக்கு வினாடிக்கு 5000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும்- காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு.

*சிறுநீரக செயல் இழப்பை கண்டுபிடிக்கும் 'ஸ்டிப்'  -சென்னை அரசு ஆஸ்பத்திரிகளில் அறிமுகம்.

* வானில் இன்று நீல நிற முழு நிலவை பார்க்கலாம் - மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் அரிய நிகழ்வு.

*உலக பேட்மிட்டன் தரவரிசை: ஆறாவது இடத்திற்கு முன்னேறினார் எச்.எஸ். பிரனாய்.

*ஆசிய கோப்பை தொடரில் முக்கிய வீரர்கள் இல்லாத இலங்கை அணி அறிவிப்பு.

Today's Headlines

*Cooking gas cylinder price reduced by Rs 200- central government action.

 * Cauvery Management Authority orders to release water at the rate of 5000 cubic feet per second for 15 days.

 * Chennai Government Hospitals
Introduce 'STIP' to detect kidney failure 

 * A blue full moon can be seen in the sky today - a rare event that only happens once in three years.

 *World Badminton Rankings: H.S.Pranai advances to sixth position.  

 *Sri Lankan team announced  the list without key players for Asia Cup series.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி