வயதானாலும் இளமையாக இருக்க வேண்டுமா? இந்த 10 உணவுகளைச் சாப்பிடுங்கள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 24, 2023

வயதானாலும் இளமையாக இருக்க வேண்டுமா? இந்த 10 உணவுகளைச் சாப்பிடுங்கள்!

 

வயதானாலும் இளமையுடன் இருக்க வேண்டும் என்பது பெரும்பாலானோருக்கு இருக்கும் விருப்பம்தான். இதற்காக தற்போது அழகு சிகிச்சைகளும் மருத்துவ சிகிச்சைகளும்கூட வந்துவிட்டன. 


ஆனால், உண்மையில் உடற்பயிற்சியும் உணவுப் பழக்கவழக்கங்களுமே இயற்கையாக இளமையுடன் வைத்திருக்க உதவும். உடலுக்கு ஊட்டச்சத்தில்லாத உணவுகளைத் தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிட்டாலே ஒட்டுமொத்மாக உடல் ஆரோக்கியமாக இருக்கும். 


இளமையாக இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்


♦ முட்டை - இதில் புரோலின், லைசின், அமினோ அமிலங்கள் உள்ளது. 


♦ மட்டன்/சிக்கனின் எலும்பு சூப் 


♦ மீன் குறிப்பாக சாலமன், மாக்கேரல், டூனா மீன்கள் - ஒமேகா 3 அமிலங்கள் நிறைந்தது. 


♦ எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை உள்ளிட்ட வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்கள். 


♦ ஸ்ட்ராபெர்ரி, புளூ பெர்ரி, பிளாக் பெர்ரி உள்ளிட்ட பெர்ரி வகைகள் 


♦ கீரை, கொத்தமல்லி உள்ளிட்ட பச்சை இலை காய்கறிகள்


♦ குடை மிளகாய் - வைட்டமின் சி நிறைந்தது. 


♦ அவோகேடா பழங்கள் - வைட்டமின் இ, சி உள்ளது. 


♦ பாதாம், வால்நட் உள்ளிட்ட நட்ஸ் மற்றும் சியா, பிளக்ஸ் விதைகள் 


♦ சோயா நிறைந்த உணவுகள் 


இந்த உணவுகள் அனைத்துமே 'கொலாஜன்' என்ற புரோட்டீன் நிறைந்தது. இவை சருமம் வயதாவதைத் தடுத்து இளமையுடன் வைத்திருக்க உதவுகின்றன. 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி