அடுத்த 2 ஆண்டுகளில் 50,000 அரசுப் பணிகள்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 27, 2023

அடுத்த 2 ஆண்டுகளில் 50,000 அரசுப் பணிகள்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.

அடுத்த இரண்டு ஆண்டுகளில், பல்வேறு அரசுப் பணிகளுக்கு சுமார் 50 ஆயிரம் பேர் தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வழங்கினார்.

🪩 Kalviseithi Whatsapp Channel

👇👇👇

https://shorturl.at/ezBM5

தமிழக அரசுப் பணிகளில் இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர் போன்ற காலியாக இருந்த 10,205 பணி இடங்களுக்கு நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.


சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற இந்த விழாவில் 10,205 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 12 இளைஞர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆணைகளை வழங்கி வாழ்த்தினார்.


இந்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் பேசியது:


“போட்டித் தேர்வுகளில் தேர்வு பெற்று, எப்படியாவது ஒரு அரசுப் பணியை வாங்கிவிட வேண்டும் என்பது, படித்த இளைஞர்களுடைய ஒரு பெரிய கனவு.


அந்த அடிப்படையில், இன்றைக்கு உங்களுடைய இலட்சியக் கனவு நிறைவேறி இருக்கிறது என்றே சொல்லவேண்டும். அதனுடைய அடையாளம்தான், இப்போது உங்கள் கையில் இருக்கின்ற பணி நியமன ஆணைகள்.


பல லட்சம் பேர் தேர்வு எழுதி, லட்சத்தில் ஒருவராக நீங்கள் எல்லாம் தேர்வாகி இருக்கிறீர்கள். இப்படி லட்சத்தில் ஒருவராக இருக்கின்ற உங்களுக்கு, ‘மக்கள் சேவை’ என்ற ஒன்றுதான் இலட்சியமாக இருக்கவேண்டும். அதற்காக மட்டும்தான் நீங்கள் எல்லோரும் பணியாற்ற வேண்டும்.


கடந்த இரண்டாண்டு காலத்தில் 12 ஆயிரத்து 576 பேருக்கு அரசுப் பணி வழங்கப்பட்டிருக்கிறது. தற்போது 10 ஆயிரத்து 205 நபர்களுக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல், நடப்பாண்டில் மேலும் 17 ஆயிரம் பேருக்கு பல்வேறு அரசுப் பணிகள் வழங்கப்பட இருக்கிறது.


அடுத்த இரண்டு ஆண்டுகளில், பல்வேறு அரசுப் பணிகளுக்கு சுமார் 50 ஆயிரம் பேர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள் என்ற மகிழ்ச்சியான செய்தியையும் நான் இங்கே அறிவிக்க விரும்புகிறேன்.” எனத் தெரிவித்தார்.


இந்த நிகழ்வில், அமைச்சர்கள், அரசு செயலாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

12 comments:

 1. விரைவில் ஆசிரியர்களை நியமிக்கவும்

  ReplyDelete
 2. அடுத்த 20 ஆண்டுகளில் 50000 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்

  ReplyDelete
 3. பொய் செல்லியே 2.5 வருடம் ஓடி விட்டது இதுக்கு மேல போட்டால் என்ன போடலனா என்ன நீங்கள் நிம்மதியா இருக்க நாங்கள் ஓட்டு போட்டு விட்டு வேதனை படுகிறோம்

  ReplyDelete
  Replies
  1. உண்மை, ஒரே நாடு ஒரே தேர்தல் வரட்டும். நமது பலம் என்ன என்று காட்டுவோம். தேர்தல் வாக்குறுதி அனைத்தயும் நிறைவேற்றி விட்டதாக கூறும் முதல்வர், அவர் அந்த தேர்தல் வாக்குறுதி கையேட்டை படித்து பார்க்கவும்

   Delete
 4. பிரதி மாதம் 1100 கோடி பணம் மகளீர் உரிமை தொகைக்கான மாநில அரசின் மாதாந்திர செலவு. இந்த பணத்தை வைத்து 5 லட்சம் ஏழை குடும்பத்தில் உள்ள படித்த இளைஞர்களுக்கு
  மாதம் 20000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு வழங்கி இருக்கலாம். இப்படி இலவசத்தை தந்து பிச்சை எடுக்க வைத்து விட்டனர்.

  ReplyDelete
 5. மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு திட்டத்தினால் தற்போது விவசாயம் இறுதி கட்டத்திற்கு வந்து விட்டது. தற்போது விவசாயம் செய்பவர்கள் , வேலை செய்பவர்கள் 50 வயதுக்கு மேல் உள்ளவர்கள். இன்னும் 10 ஆண்டு கழித்து விவசாயம் செய்ய நினைத்தாலும் , அவர்களுக்கு விவசாயம் தெரியாது. தவிர்க்கப்பட வேண்டிய திட்டங்கள்.

  1. 100 நாள் வேலை திட்டம்
  2. மகளீர் உரிமை தொகை,
  3. இலவச அரிசி.
  4. இலவச பேருந்து
  5. இலவச மின்சாரம்.
  தயவு செய்து உங்கள் பதவி வெரிக்காக , எங்களை பிச்சை காரன் ஆக்க வேண்டாம். உழைத்து சாப்பிட்டால் தான் நிம்மதி. திருடி, கொள்ளை அடித்து பணம் சேர்க்கும் அரசியல் வாதிகளுக்கு உழைத்து சாப்பிடும் மகிழ்ச்சி தெரியாது.

  ReplyDelete
  Replies
  1. படித்து மானர்வகளுக்கு நல்ல அரசியல்வாதிக்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்லி கொடுக்க போகும் நீங்களே பென்ஷன் மற்றும் பகுதி நேர ஆசிரியருக்கு பணி நிரந்தரம் என்று சொன்னதும் ஓட்டு போட்டு ஆட்சியில் உட்கார வைத்துள்ளீர்கள். படிக்காத பாமர மக்களை குறை கூறுவது நல்லது அல்ல

   Delete
  2. அரசியல் வாதிகளுக்கு பதவி வெறி என்றால் இந்த ஆசிரியர்களுக்கும் அரசாங்க பதவி வெறியில் தான் இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் ஒன்று தான்

   Delete
 6. பல நேரங்களில், கடவுள் இல்லை என்றே நினைக்கிறேன். ஊழல் செய்து பணம் சேர்க்கும் அரசியல் வாதிகள், அரசு அதிகாரிகளுக்கு உடனடியாக கேன்சர், பித்து பிடித்தல் போன்ற கொடிய நோய் வந்து பணம் முக்கியம் இல்லை என நினைக்க வைக்க வேண்டும். இல்லை எனில் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் இளையவர் ஒருவரை இறைவன் அழைத்து கொள்ள வேண்டும். அப்போது தான் நாடு திருந்தும்.
  தனது கடமையை செய்யாத ஆசிரியர்களின் குழந்தைகள் நல்ல நிலைக்கு செல்கின்றனர். இது போன்ற ஆசிரியர்களின் குழந்தைகள் பைத்த்தியம் பிடித்து அழைய வேண்டும். மனம் மிக்க வேதனயாக உள்ளது.

  ReplyDelete
 7. பல வருடங்களாக படித்து விட்டு தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று வாழ்க்கையில் நொந்து போய் உள்ள நிலையில் எங்கே சென்று தான் போராடுவது? தற்காலிக ஆசிரியர்கள் மட்டுமே நியமித்தது கடந்த அரசாங்கம். அதே போல் இந்த அரசு செய்கிறது. ஏன் தகுதி தேர்வு வைக்க வேண்டும்? இதை எங்கே சென்று கேட்க வேண்டும்? பகுதி நேர ஆசிரியர்கள் இந்தியா முழுவதும் நியமனம் செய்யப் பட்டது. பாதி பேர் நிரந்தரம் செய்யப்பட்டு உள்ளனர். ஆனால் இந்த தமிழ்நாட்டில் மட்டும் தான் இன்னும் வெறும் 10000 சம்பளம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி???? டிபிஐ கேம்பசில் போராட்டம் செய்ய தடை.....

  ReplyDelete
 8. மற்றவர்களை நம்பி பயனில்லை, விரைவில் எனது தலைமையில் டெட் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடைபெறும். விரைவில் தேதி அறிவிக்கிறேன். உங்களுக்கு பணி நிச்சயம். இங்ஙனம். தகடூர் தனபால்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி