3 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளியிலிருந்து நீக்கம்: எங்கே? என்ன காரணம்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 27, 2023

3 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளியிலிருந்து நீக்கம்: எங்கே? என்ன காரணம்?

பிகாரில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் பெயர்களை அந்த மாநில கல்வித்துறை நீக்கியுள்ளது. 


பிகாரில் உள்ள அரசுப் பள்ளிகளில் கடந்த 15 நாள்களுக்கு மேலாக முன்னறிவிப்பு மற்றும் காரணமின்றி பள்ளி விடுப்பு எடுத்ததன்பேரில் பள்ளிக் கல்வித்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.


மாணவர்கள் பள்ளிக்கு வராதது குறித்து பெற்றோர்கள் சரியான காரணத்தை கடிதம் மூலம் சமர்ப்பிக்குமாறு கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது. அவர்களில் பலர் கடிதம் எழுதி கல்வித்துறை அதிகாரிகளிடம் சமர்ப்பித்தனர். ஆனால், சுமார் 3,32,000 பேரின் பெற்றோர்கள் எந்தவித பதிலும் அளிக்காததால் கல்வித்துறை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


கல்வித்துறை தகவலின்படி, நான்காம் வகுப்பு படிக்கும் 46,000 மாணவர்களின் பெயர்களை நீக்கியுள்ளது. அதேபோன்று 5-ம் வகுப்பு 44 ஆயிரம் மற்றும் 6-ம் வகுப்பைச் சேர்ந்த 39 ஆயிரம் பேரும், மற்ற வகுப்புகளைச் சேர்ந்தவர்களும் நீக்கப்பட்டுள்ளனர். 


பொதுத்தேர்வு எழுதுவதற்கு மாணவர்கள் கட்டாயம் 75 சதவீத வருகைப் பதிவு பெற்றிக்க வேண்டும் என கல்வித்துறை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது. இதைத்தவிர எந்த ஒரு மாணவரும் தொடர்ந்து மூன்று நாள்களுக்கு மேல் பள்ளிக்கு விடுப்பு எடுக்கக்கூடாது, அவ்வாறு தவறினால், சரியான காரணங்களை பள்ளி நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

2 comments:

  1. வயதுக்கு ஏற்ற வகுப்பில் நேரடியாக 9 ம் சேர்க்கலாமா. எதுக்கு 1 வது 2 வது படிச்சிட்டு

    ReplyDelete
  2. 9 ம் வகுப்பில்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி