2024ல் ஜேஇஇ, நீட், கியூட் தேர்வுகள் எப்போது? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 19, 2023

2024ல் ஜேஇஇ, நீட், கியூட் தேர்வுகள் எப்போது?

தேசிய தேர்வுகள் முகமை, நாட்டின் மிக முக்கிய நுழைவுத் தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், 2024ஆம் ஆண்டுக்கான முக்கிய நுழைவுத் தேர்வுகள் எப்போதும் நடக்கும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.


தேசிய தேர்வுகள் முகமை நடத்தும் முக்கிய தேர்வாகப் பார்க்கப்படுவது ஜேஇஇ தேர்வு, இதில் தேர்ச்சி பெற்றால்தான் இந்தியாவில் உள்ள ஐஐடி, என்ஐடிகளில் சேர்க்கை பெற முடியும். அந்த வகையில், 2024ஆம் ஆண்டு ஜேஇஇ முதன்மைத் தேர்வு ஜனவரி மாதம் மூன்றாம் வாரத்தில் நடைபெறும் என்றும், இரண்டாவது தேர்வு ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்தில் நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


அடுத்தது க்யூட் தேர்வு. இது 2024ஆம் ஆண்டு மே மாதம் முதல் வாரத்தில் நடைபெறவிருப்பதாகவும், இளநிலை நீட் தேர்வு மே மாதம் நடைபெறவிருப்பதாகவும், குறிப்பாக மே 5ஆம் தேதி நடைபெறலாம் எனறும் கூறப்படுகிறது.


இந்த நிலையில், 2024 - 25ஆம் ஆண்டுக்கான நுழைவுத் தேர்வுகள் குறித்த காலண்டரையும் என்டிஏ விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதனை, என்டிஏ அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ள முடியும்.


ஜேஇஇ

ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கான தேதிகள் அடுத்த வாரம் வெளியிடப்படலாம் எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு முன்னதாகவே தேதிகள் அறிவிக்கப்படவிருக்கின்றன. அதுபோல, நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்களும் விரைவாகவே தொடங்கவிருக்கின்றன.


இதற்கான விண்ணப்பங்கள் அல்லது தேர்வுகள் குறித்து jeemain.nta.nic.in அல்லது nta.ac.in -இல் அறியலாம்.


நீட்

2023ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்ற நிலையில், 2024ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி நடைபெறவிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி