வங்கக் கடல் பகுதியில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 13, 2023

வங்கக் கடல் பகுதியில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!!

 

வங்கக் கடல் பகுதியில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக செப்டம்பர் 18ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்து இருந்தது. இந்த நிலையில், வடமேற்கு மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.இந்த குறைந்த காற்றழுத்த பகுதி அடுத்த 24 மணிநேரத்தில், மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து தெற்கு ஒடிசா, வடக்கு ஆந்திரா, தெற்கு சட்டீஸ்கர் கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


அதேபோல அடுத்த மூன்று நாட்களுக்கு இது தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திரா கடலோர பகுதிகள் மற்றும் தெற்கு சத்தீஸ்கர் நோக்கி நகர வாய்ப்பு இருப்பதாகவும் இதன் காரணமாக இன்று ஆந்திராவின் கடலோர பகுதிகள் மற்றும் வருகிற செப்டம்பர் 16, 17 ஆம் தேதிகளில் தெலங்கானாவில் பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் ஒரு சில இடங்களில் மட்டும் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.அதே போன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி