நாடு முழுவதும் உள்ள ஐஐடி உட்பட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர கேட் எனப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கணினி வழியிலான கேட் தேர்வு, இயந்திரவியல், கட்டிடவியல் உட்பட 29பாடப் பிரிவுகளில், மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.
2024-ம் ஆண்டுக்கான கேட் தேர்வு பிப்ரவரி 3 முதல் 11-ம் தேதி வரை பாடப்பிரிவு வாரியாக நடைபெற உள்ளது. இந்த முறை கேட் தேர்வை பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் மையம் (ஐஐஎஸ்சி) நடத்த உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஆகஸ்ட்30-ம் தேதி தொடங்கியது. மாணவர்கள் பலர் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்நிலையில், விண்ணப்பிக்கும் காலஅவகாசம் இன்றுடன் (செப். 29) நிறைவடைகிறது. மாணவர்கள் https://gate2024.iisc.ac.in/ எனும் இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும், தாமதக்கட்டணத்துடன் அக். 13 வரை விண்ணப்பிக்கலாம். தொடர்ந்து, நவம்பர் 7 முதல் 11-ம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் செய்யலாம்.
தேர்வுக்கான ஹால் டிக்கெட் ஜனவரி 3-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. தேர்வு முடிவுகள் மார்ச் 16-ம் தேதி வெளியாகும். கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் அறியலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி