ஆசிரியர் தகுதி தேர்விற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை முதல் இலவசப்பயிற்சி வழங்க உள்ளதாக கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் நடக்க உள்ள தேர்வுகள் பற்றி அறிவிப்பு டிச.,ல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதித்தேர்வு தாள் 1, தாள் 2 தேர்வுகளுக்கான இலவசப்பயிற்சி மாவட்ட வேலைவாய்ப்பு, அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்பட உள்ளது.பயிற்சிகள் நாளை(செப்.,30) துவங்குகிறது. ஆசிரியர் தகுதித்தேர்விற்கு தயாராகும் தேர்வர்கள் பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலரை 63792 68661 அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
வேலைய கொடுங்கடானா பயிற்சி கொடுக்கரானுக.... பூரா பைத்தியக்கார பயலா தான் இருக்கிறானுங்க
ReplyDelete