தமிழக அரசு சார்பில், 2022-23 கல்வியாண்டில் சிறப்பாக பணியாற்றிய, 390 பேருக்கு, மாநில நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இதில், சிறப்பாசிரியர்களின் பெயர்கள், சொற்பமாகவே இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
குறிப்பாக, கொங்கு மண்டலத்திற்குட்பட்ட, கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கரூர், சேலம், நாமக்கல் ஆகிய ஏழு மாவட்டங்களில், 73 பேர் நல்லாசிரியர் விருது பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதில், நாமக்கல் மாவட்டத்தில் இருந்து, ஒரு ஓவிய ஆசிரியர் பெயர் மட்டுமே இருப்பதாக, சிறப்பாசிரியர்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.தமிழ்நாடு கலையாசிரியர் நலசங்க மாநில தலைவர் ராஜ்குமார் கூறுகையில் மாநில நல்லாசிரியர் விருது பட்டியலில், தலைமையாசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களின் பெயர்களே, அதிகம் இடம்பெறுகின்றன. ஆனால், சிறப்பாசிரியர்கள் எண்ணிக்கை சொற்பமாகவே உள்ளது.
குறிப்பாக, கொங்கு மண்டலத்திற்குட்பட்ட ஏழு மாவட்டங்களில், ஒரு சிறப்பாசிரியர் மட்டுமே பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.மற்ற மாவட்டங்களில், விருது பெற தகுதியான சிறப்பாசிரியர்களே இல்லையா? கலை பண்பாட்டு திருவிழா, கலா உத்சவ், கலை அரங்கம் போன்ற செயல்பாடுகளில், அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஆசிரியர்களை கவுரவிக்காமல் புறக்கணித்தது சரியல்ல என்றார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி