பள்ளிக்கல்வி வளாகத்தில் இனி போராட்டம் நடத்த தடை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 28, 2023

பள்ளிக்கல்வி வளாகத்தில் இனி போராட்டம் நடத்த தடை

தமிழக பள்ளிக்கல்வியின் பல்வேறு இயக்குனரகங்கள் மற்றும் அதன் சார்பு அலுவலகங்கள், சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ., வளாகத்தில் இயங்குகின்றன. அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் சங்கத்தினர், பல்வேறு கோரிக்கைகளுக்காக, இந்த வளாகத்தில் குவிந்து திடீர் போராட்டம் நடத்துவது வழக்கம்.இதன்படி, தமிழ்நாடு பகுதிநேர சிறப்பாசிரியர் சங்கத்தினர், மூன்று நாட்களாக காத்திருப்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். 


இவர்களை தொடர்ந்து, ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் சங்கம், இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் உள்ளிட்ட சங்கத்தினர், இன்று முதல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.இந்நிலையில், ஆசிரியர் சங்கத்தினருக்கு, நுங்கம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்பில், நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.அதில், கூறியிருப்பதாவது:முக்கிய நபர்களின் இல்லங்களுக்கு முன்பாகவும், அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் முன்பாகவும், எந்த ஒரு தனி நபர் முன்பாகவும் மற்றும் அமைப்புக்கு எதிராகவும், எவ்வித போராட்டங்களும் நடத்த அனுமதி இல்லை. பொது அமைதியை கருத்தில் கொண்டு, சட்டம், ஒழுங்கு பிரச்னையை தவிர்க்கும் பொருட்டு, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.


நுங்கம்பாக்கத்தில் உள்ள, டி.பி.ஐ., கட்டட வளாகத்தில் பள்ளிக்கல்வி இயக்குனர், தொடக்க கல்வி, அரசு தேர்வுகள் துறை, தனியார் பள்ளிகள் இயக்குனரகம், ஆசிரியர் தேர்வு வாரியம், கல்வி டிவி தமிழ்நாடு பாடநுால் நிறுவனம், தபால் அலுவலகம், மின்துறை, அரசு நியாய விலைக்கடை என, 15 அலுவலகங்கள் செயல்படுகின்றன.இங்கு, 1,000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் அலுவல் ரீதியாக இந்த வளாகம் வந்து செல்கின்றனர். எனவே, பொது அமைதி மற்றும் சட்டம், ஒழுங்கை காக்கும் வகையில், இன்று முதல் எந்த போராட்டமும் நடத்த அனுமதி இல்லை.இவ்வாறு நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.

7 comments:

  1. பல வருடங்களாக படித்து விட்டு தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று வாழ்க்கையில் நொந்து போய் உள்ள நிலையில் எங்கே சென்று தான் போராடுவது? தற்காலிக ஆசிரியர்கள் மட்டுமே நியமித்தது கடந்த அரசாங்கம். அதே போல் இந்த அரசு செய்கிறது. ஏன் தகுதி தேர்வு வைக்க வேண்டும்? இதை எங்கே சென்று கேட்க வேண்டும்? பகுதி நேர ஆசிரியர்கள் இந்தியா முழுவதும் நியமனம் செய்யப் பட்டது. பாதி பேர் நிரந்தரம் செய்யப்பட்டு உள்ளனர். ஆனால் இந்த தமிழ்நாட்டில் மட்டும் தான் இன்னும் வெறும் 10000 சம்பளம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி????

    ReplyDelete
  2. பல வருடங்களாக படித்து விட்டு தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று வாழ்க்கையில் நொந்து போய் உள்ள நிலையில் எங்கே சென்று தான் போராடுவது? தற்காலிக ஆசிரியர்கள் மட்டுமே நியமித்தது கடந்த அரசாங்கம். அதே போல் இந்த அரசு செய்கிறது. ஏன் தகுதி தேர்வு வைக்க வேண்டும்? இதை எங்கே சென்று கேட்க வேண்டும்? பகுதி நேர ஆசிரியர்கள் இந்தியா முழுவதும் நியமனம் செய்யப் பட்டது. பாதி பேர் நிரந்தரம் செய்யப்பட்டு உள்ளனர். ஆனால் இந்த தமிழ்நாட்டில் மட்டும் தான் இன்னும் வெறும் 10000 சம்பளம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி???? டிபிஐ கேம்பசில் போராட்டம் செய்ய தடை.....

    ReplyDelete
  3. படித்த மக்களை முட்டாளக்கும் அரசிற்க்கு வரும் மமக்களவை தேர்தலில் சரியான பாடம் கற்று கொடுக்க வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் சுய நலத்திற்காக ஓட்டு போட்டீர்கள். உங்களை விட அந்த அரசியல்வாதிகள் எவளவோ மேல். தயவு செய்து நீங்கள் எல்லாம் ஆசிரியராக இருந்து எங்கள் பிள்ளைகளுக்கும் சுயநலத்தை நஞ்சாக விதைக்க வேண்டாம்

      Delete
    2. உங்க கோரிக்கை மட்டும் இல்லை...பல வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை விடியல்

      Delete
  4. எனக்கு வேலை கிடைக்கலன்னா கூட பரவா இல்ல.... இந்த மக்கள் விரோத ஆட்சிக்கு முடிவுரை எழுத வேண்டும் 🔥🔥

    ReplyDelete
  5. சீப்பை மறைத்து வைத்து விட்டால் கல்யாணம் நடக்காமல் போகாது

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி