ஆசிரியர் தகுதித் தேர்வு பதவி உயர்வு வழக்குகள் ..
ஆ. மிகாவேல் ஆசிரியர் , மணப்பாறை .
9047191706 .
ஆசிரியர்கள் , அரசு ஊழியர்களுக்கு 1000 க்கும் மேல் மனு எழுதி கொடுத்துள்ளேன்.
என்னை அணுகி நான் வழக்கு தொடர உதவிய வழக்குகள் 500 ஐ தொடும் .பதவி உயர்வு வழக்கு மேல் முறையீடு செய்ய வேண்டாம் என கூறிய வழக்குகள் 50 ஐ தாண்டும் .Audit வழக்குகளில் , தேர்வு நிலை வழக்குகள் , இளையோர் மூத்தோர் ஊதிய நிர்ணய வழக்குகள் ,ஒழுங்கு நடவடிக்கை வழக்குகள், பணி வரன்முறை வழக்குகள் பங்களிப்பு செய்து வருகிறேன் .
பழைய ஓய்வூதிய திட்டம் நீதி மன்ற தீர்ப்பின் மூலம் 20 பேருக்கு பெற்றுக் கொடுத்துள்ளேன் .
01.06.2009க்கு பிறகு பணியில் சேர்ந்த 30 பேருக்கு Fitment 1.86 நீதிமன்றம் மூலம் பெற்றுக் கொடுத்துள்ளேன் . அரசின் நிதி உதவி பெறும் பள்ளியில் பணியாற்றி அரசுப் பணியில் சேர்ந்தோருக்கு அரசின் நிதி உதவி பெறும் பள்ளியில் பெற்ற ஊதியத்தை அரசுப் பள்ளியில் பெற்றுக் கொடுத்துள்ளேன்
* வழக்குகளில் இரண்டு வாய்ப்புகள் தான் . வழக்கில் வெற்றி பெறுவது , வெற்றிகாக சரியான முறையில் போராடினோம் என்பது .
* ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் பதவி உயர்வு என்று வெவ்வேறு வழக்குகளில் இதுவரை 10 நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர் .
* சீராய்வு Review பயன் தராது என்று பதிவு செய்துள்ளேன் . வழக்கு உச்ச நீதிமன்றம் மேல் முறையீடு செய்யப்பட்ட நிலையில் Review பற்றி விரிவாக பதிவு தவிர்க்கிறேன்
* ஒரு குறிப்பிட்ட சங்கம் உச்ச நீதிமன்றத்தில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது சரி . வழக்கு சார்ந்த எனக்கு உள்ள நீண்ட அனுபவத்தின் அடிப்படையில் கூறுகின்றேன் .
* உயர் நீதிமன்ற தீர்ப்பில் மாநில அரசின் உரிமை தொடர்பாக விரிவாக ஆராய பட்டுள்ளது .எனவே இந்த வழக்கில் அரசியல் சாசன வழக்கில் அனுபவமுள்ள உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் வாதம் அவசியமாகிறது
.மற்ற சங்கங்கள் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரை அமர்த்துவது அவசியமாகும் .
* முதுகலை ஆசிரியர் , உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழக்கின் தீர்ப்பு அடிப்படையில் PG பணியாற்றி பதவி உயர்வு பெற்றோரை பணி இறக்கம் செய்ய வாய்ப்பு உள்ளது . தற்போது இவர்கள் மூத்த வழக்கறிஞர் மூலம் உயர் நீதிமன்ற Review செய்துள்ளனர் . வழக்கு தள்ளுபடி செய்ய அதிக வாய்ப்பு உண்டு ஆனால் உச்ச நீதிமன்றம் இவர்களின் கோரிக்கையை ஏற்க வாய்ப்பு உண்டு .
* வழக்கை சரியான திசையில் நடத்தவில்லையெனில் தகுதித் தேர்வின்றி பதவி உயர்வு பெற்ற றோருக்கும் மேற்கண்ட பத்தியில் சுட்டிக்காட்டிய பிரச்சனை எழ வாய்ப்பு உண்டு .ஆனால் உச்ச நீதிமன்றம் இந்த வாரம் ஒரு தீர்ப்பில் பாதுகாப்பு செய்துள்ளது .உயர் நீதிமன்ற , உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் முன்பே Uதவி உயர்வில் சென்றோரை பணி இறக்கம் செய்ய கூடாது .
* ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தீர்ப்பு வந்தவுடன் எனது பதிவை பார்த்து , யூ டியூப் தளம் ஒன்று என்னை பேட்டி எடுக்க கேட்டனர் . விடுமுறை நாளில் தொடர்பு கொள்கின்றேன் என்று கூறி தொடர்பு கொள்ளவில்லை .இதை குறிப்பிட காரணம் பரபரப்பு காக பதிவு செய்வது எனது நோக்கம் அல்ல .
* வழக்கில் உள்ளதை உள்ளபடி பேசினால் தான் வெற்றி பெற முடியும் . பொய்யான நம்பிக்கை வெற்றி தராது .
* இந்த வழக்கோடு தொடர்புடைய 42 ஆசிரியர்களுக்கு வழக்கில் வெற்றி பெற எழுதி கொடுத்துள்ளேன் .மூத்த வழக்கறிஞரிடம் கொடுத்துள்ளனர் .
* அரசாணைகளை நீதிமன்ற தீர்ப்பின் வழியாக எப்படி புரிந்து கொள்வது , துறையால் வழங்க முடியாதவற்றை , வழங்க மறுப்பவற்றை நீதிமன்றம் மூலம் பெற்று தருவது என்ற காலமும் இயற்கையும் காட்டிய பாதையில் தொடர்ந்து பயணிப்பேன் .
ஆ. மிகாவேல்
ஆசிரியர் ,
மணப்பாறை
9047191706
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி