மாணவர்களை ஆசிரியர்கள் கண்டிப்பது நல்லதுக்குதான் என பெற்றோர் புரிய மறுக்கிறார்கள் கவர்னர் ஆர்.என்.ரவி வேதனை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 11, 2023

மாணவர்களை ஆசிரியர்கள் கண்டிப்பது நல்லதுக்குதான் என பெற்றோர் புரிய மறுக்கிறார்கள் கவர்னர் ஆர்.என்.ரவி வேதனை

 

கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள பாரதியார் அரங்கில் ஆளுநரின் "எண்ணித்துணிக" பகுதி- 9 வது நிகழ்வு நடைபெற்றது. அதில் தேசிய அளவில் விருது பெற்ற ஆசிரியர்கள் 24 பேருக்கு நினைவு பரிசு கொடுத்து கௌரவிக்கப்பட்டது.பின்னர் மேடையில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "ஆசிரியர்களுக்கு தலை வணங்குகிறேன். குறிப்பாக பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு எனது மரியாதையைச் செலுத்துகிறேன். மின்சாரம் இல்லாமல், எந்த வித அடிப்படை வசதிகளும் இல்லாத பகுதியில் கூட, பல கிலோமீட்டர் நடந்து சென்று பாடம் நடத்திய ஆசிரியர்கள் நிறைய உள்ளனர். 


நான் சிறுவயதில் மாணவனாக இருக்கும் போது எனது ஆசிரியர் குளிப்பதற்கு கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொடுப்பேன். ஆசிரியர் மாணவர் என்பது ஒரு உறவு. ஆசிரியர் உறங்கும் போது அவரது கால்களை பிடித்துவிடுவேன்.அவர்கள் ஆசிரியர்கள் அல்ல, அதற்கும் மேலானவர்கள். அவர்களை குரு என்று அழைத்தோம். அதுதான் நமது பண்பாடு. ஆண்டாண்டு காலமாக அதைத்தான் நாம் பின்பற்றி வந்தோம். குருவிற்கும், மாணவருக்கும் இடையேயான உறவு மட்டுமே இருந்தது. மாணவரின் பெற்றோர்கள், பாதுகாவலர்கள் என யாரும் ஆசிரியர்களிடம் கேள்வி கேட்க முடியாது.வளர்ந்து வரும் இந்த காலத்தில் ஆசிரியர்களின் நிலை கடினமாக உள்ளது. மாணவர்களின் பெற்றோர்கள், பாதுகாவலர்கள் என அனைவரும் ஆசிரியர்களுக்கு நெருக்கடியைக் கொடுக்கின்றனர். ஆசிரியர்கள், மாணவர்கள் இடையே ஆன உறவும் இப்போது கிடையாது.


இன்று இந்தியா G20 மாநாட்டின் தலைமை ஏற்று நடத்துகிறது. 2047ம் ஆண்டு உலகில் தலைசிறந்த நாடாகவும், உலகிற்கு வழி காட்டும் நாடாகவும் இந்தியா மாறும். உலக அளவில் நாம் தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதில் 3வது நாடாக உள்ளோம். நம் நாட்டில் புத்தொழில் வளர்ச்சி அதிகமாகி உள்ளது. நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் தேசிய சொத்துக்கள்.இங்கு ஆண் ஆசிரியர்களை விட பெண் ஆசிரியைகள் அதிகம் உள்ளனர். பெண்களுக்கான வளர்ச்சி என்பது நமது சமூகத்தில் அதிகம் உள்ளது. “பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்” என்ற பாரதியாரின் கவிதைக்கு இணங்க, பட்டமளிப்பு விழாக்களில் 70 சதவீதம் பேர் பெண்கள் தான் உள்ளனர்.பெண் குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உலக அளவில் இருக்கும் வாய்ப்புகளை பெண்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். பெண் குழந்தைகள் கல்வி கற்பதற்கான வாய்ப்புகள் இருப்பது நிறைய பேருக்குத் தெரியவில்லை. பெண்களுக்கான வாய்ப்புகள் பற்றி அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்” எனக் கூறினார்.



1 comment:

  1. தவறுசெய்யும்மாணவர்கள்மீதும்நடவடிக்கை எடுக்க கூடாது என கல்வித்துறை சொல்கிறது.
    பாவம் ஆசிரிய பெருமக்கள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி