SNA கணக்குகளில் திட்டம் சாராத நிதிகளை செலுத்தக் கூடாது - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 8, 2023

SNA கணக்குகளில் திட்டம் சாராத நிதிகளை செலுத்தக் கூடாது - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!

 

கடந்த நிதி ஆண்டு 2022-2023 முதல் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் SNA கணக்குமுறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இந்த வங்கிக் கணக்கில் ரொக்கமாக பணம் செலுத்துவதோ ( அல்லது ) வேறு திட்ட நிதிகளோ பணப்பரிவர்த்தனை செய்தால் , அத்தொகை மாநிலத்திட்ட இயக்கக SNA வங்கிக் கணக்கில் சேர்ந்து விடுகிறது.


 இத்தொகையை மீளப் பெறுவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளது. இவ்விவரத்தினை தொலைபேசி வாயிலாக பலமுறை வலியுறுத்தியும் இதுநாள் வரை இந்நிகழ்வு நடைபெறுகிறது.


 இனிவரும் காலங்களில் இது போன்று நடைபெறாமல் இருக்க , இதனை அனைத்து வட்டார வளமையங்கள் , SNA கணக்கு முறையை செயல்படுத்தும் பள்ளி , ( Child Agency of Each BRC ) , KGBV மையங்கள் , NSCBAV மையங்கள் அனைத்திற்கும் சுற்றறிக்கையாக அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி