போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது - காலை 11.00 மணிக்கு கூடிய டிட்டோஜேக் கூட்டத்தின் மூலமாக வெளியிடப்பட்ட 2 தீர்மானங்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 5, 2023

போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது - காலை 11.00 மணிக்கு கூடிய டிட்டோஜேக் கூட்டத்தின் மூலமாக வெளியிடப்பட்ட 2 தீர்மானங்கள்

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு டிட்டோஜேக் பேரமைப்பின் மாநில உயர்மட்டக்குழு கூட்டம் 05.10.2023 காலை 11.00 மணியளவில் தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு.சி.சேகர் அவர்கள் தலைமையில் சென்னை திருவல்லிக்கேணி , நல்லதம்பி வீதியில் அமைந்துள்ள தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில அலுவலகத்தில் நடைபெற்றது . கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.


 தீர்மானம் -1 

தங்களுடைய கோரிக்கைகளுக்காக சென்னை பள்ளிக்கல்வி இயக்ககம் பேராசிரியர் க.அன்பழகனார் கல்வி வளாகத்தில் அமைதி வழியில் போராடி வந்த இடைநிலை ஆசிரியர்கள் , பகுதிநேர சிறப்பாசிரியர்கள் , பணி நியமனத்திற்காக போராடி வந்த தகுதித்தேர்வு முடித்த பணி நாடுநர்கள் ஆகியோரை கைது செய்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு டிடடோஜேக் பேரமைப்பு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது . கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்திட தமிழக அரசை பெரிதும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்m

தீர்மானம் -2 

டிட்டோஜேக்கின் 30 அம்சக் கோரிக்கைகளை விளக்கியும் , கைது செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் , பணி நிரந்தரம் கோரும் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் , பணி நியமனத்திற்காக போராடி வந்த தகுதித்தேர்வு முடித்த பணி நாடுநர்கள் ஆகியோரை விடுதலை செய்ய வலியுறுத்தியும் தமிழக முழுவதும் 05.10.2023 மாலை பயிற்சி மையத்தின் முன்பு கூட்டங்களை நடத்துவது என டிட்டோஜேக் பேரமைப்பு முடிவு செய்து அறிவிக்கிறது .

8 comments:

  1. பகுதி நேர ஆசிரியர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

    ReplyDelete
  2. மாதம் 5 லட்சம் தந்தால் திருப்தி ஆவார்களா? எவ்வளவு தந்தாலும் பத்துவதில்லை உங்களுக்கு. அவர்களை கைது செய்யாமல் பணி நீக்கம் செய்யுங்கள். அப்பது தான் மற்றவர்கள் திருந்துவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. பொறாமை சிந்தனை...கடைசி வரை பிரைவேட் கக்கூஸ் கழுவ வேண்டியது தான்...

      Delete
    2. தேவடியாள் வயிற்றில் பிறந்தவன் தான் இப்படி பேசுவான். இன்னும் கெட்ட வார்த்தை பேச வசிராத. உங்க அம்மா , பொண்டாட்டிய ககூஸ் கழுவ வைடா நாயே

      Delete
  3. பயிற்சியினை முழுவதுமாக புறங்கணிப்பதாக ஏன் தீர்மானம் நிறைவேற்றகூடாதா என்பது எனது கேள்வி. அனைத்து தலைமையாசிரியர்கள் முதுகலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உள்ள ஆசிரியர்கள் மற்றும் பிற சங்கங்களின் உதவியயை நாடி தமிழ்நாடு முழுவதுமு் போராட்டம் நடத்த திட்ட மிடுங்கள். அதுதான் சரியானதாக இருக்கும் என்பது எனது கருத்து.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி