16.10.23 முதல் Teacher, Student Attendance தவிர வேறு எந்த ஆன்லைன், app பதிவிடுதல் போன்ற பணிகளை செய்ய மாட்டோம் - டிட்டோஜாக் சார்பில் தீர்மானம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 8, 2023

16.10.23 முதல் Teacher, Student Attendance தவிர வேறு எந்த ஆன்லைன், app பதிவிடுதல் போன்ற பணிகளை செய்ய மாட்டோம் - டிட்டோஜாக் சார்பில் தீர்மானம்


வருகிற 16.10.23 முதல் Teacher, student attendance தவிர வேறு எந்த ஆன்லைன், app பதிவிடுதல் போன்ற பணிகளை செய்ய மாட்டோம் என டிட்டோஜாக் சார்பில் தீர்மானம் நிறைவேற்றி அரசிடம் கொடுக்கப்பட்டுள்ளது.


எண்ணும் , எழுத்தும் திட்டத்தை முழுமையாகக் கைவிடவேண்டும்

 ஆசிரியர்களுக்குத் தேவையற்ற பணிச்சுமைகளை ஏற்படுத்துவதோடு , மாணவர்களின் கல்வித்தரத்தினைப் பாதிக்கும் எண்ணும் , எழுத்தும் திட்டத்தை முழுமையாகக் கைவிட வேண்டும். எண்ணும் , எழுத்தும் திட்டத்தில் செல்போன் செயலி மூலம் தேர்வு நடத்துவதைப் பெற்றோர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். செல்போன் மூலம் தேர்வு நடத்துவதிலும் , செல்போன் மூலம் மாணவர் வளரறி மதிப்பீட்டுப் பணிகளை ஒவ்வொரு வாரமும் பதிவேற்றம் செய்வதிலும் , கிராமப்புறங்களில் NET WORK இல்லாத நிலையில் ஆசிரியர்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். 


ஆசிரியர்களின் கற்பித்தல் பணிக்கு இடையூறாக இருப்பதோடு , ஆசிரியர்களுக்குத் தேவையற்ற பணிச்சுமைகளை உருவாக்கி கடும் மனஉளைச்சலை ஏற்படுத்தும் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் ONLINE பதிவேற்றப்பணிகளில் இருந்தும் , EMIS , TNSED APP மூலம் நடைபெறும் பதிவேற்றப் பணிகளில் இருந்தும் 16.10.2023 முதல் ஆசிரியர்கள் தங்களை முழுமையாக விடுவித்துக்கொள்வது என டிட்டோஜேக் பேரமைப்பு ஒருமனதாக முடிவு செய்து அறிவிக்கிறது.


 மாணவர் வருகை , ஆசிரியர் வருகைப் பதிவேற்றம் தவிர பிற எவ்வித விபரங்களையும் செல்போன் மூலம் பதிவேற்றும் பணிகளை 16.10.2023 முதல் ஆசிரியர் மேற்கொள்வதில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்கிறார்கள் என்ற விபரத்தினை , மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கும் , மதிப்புமிகு . பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலாளர் அவர்களுக்கும் , மதிப்புமிகு . பள்ளிக்கல்வி இயக்குநர் , மதிப்புமிகு . தொடக்கக்கல்வி இயக்குநர் , மதிப்புமிகு . கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்கக இயக்குநர் ஆகியோருக்கும் டிட்டேஜேக் பேரமைப்பின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்.


 Letter - Download here

2 comments:

  1. அருமையான முடிவு. தயவு இதிலிருந்து பின் வாங்காதீர்கள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி