வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கான 2023 - ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் : 01 / 2023. நாள் .05.06.2023 - ன்படி 10.09.2023 அன்று ஒளியியல் குறி அங்கீகாரம் ( Optical Mark Recognition ( OMR ) ) மூலம் தேர்வு நடத்தப்பட்டது. தற்போது மேற்காணும் போட்டித் தேர்வுக்கான கேள்விகளுக்கு உரிய தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் ( Tentative Key Answers ) வினாத்தாள் 4 ' வகைக்குரியது ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www.trb.tn.gov.in- வ் வெளியிடப்பட்டுள்ளன.
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தற்காலிக உத்தேச விடைக்குறிப்பின் மீது ஆட்சேபனை தெரிவிக்க விரும்பும் தேர்வர்கள் 03.10.2023 முதல் 10 .10.2023_பிற்பகல் , 05.30 மணி வரை ஆசிரியர் தேர்வுவாரிய இணையதள முகவரியில் மட்டுமே ஆதாரங்களுடன் பதிவு செய்திடல் வேண்டும் . தபால் அல்லது பிறவழி முறையீடுகள் ஏற்கப்படமாட்டாது . அவை நிராகரிக்கப்பட்டதாகக் கருதப்படும் அங்கீகரிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் ( Standard Text Books ) ஆதாரம் மட்டுமே அளிக்கவேண்டும் . கையேடுகள் ( Guides , Notes ) ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது . தேர்வர்கள் வினாத்தாள் ( " A " series question paper ) TRB website- ல் வெளியிடப்பட்டுள்ளதற்குரிய தற்காலிக விடைக்குறிப்பிற்கு இணையவழியில் ஆட்சேபணை ( objection ) தெரிவிக்கும் போது உரிய வழிமுறைகளைத் தவறாமல் பின்பற்றி அதற்குரிய சான்றாவணங்களை இணைக்க வேண்டும் . சான்றாவணங்கள் இணைக்கப்படாத முறையீடுகள் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது . இவையனைத்தும் முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
மாற்றுத் திறன் படைத்த தேர்வர்கள் ( PWD candidates ) பகுதி- B- ல் வினா எண் 3 } முதல் 180 வரை உள்ள வினாக்களுக்கு மட்டுமே ஆட்சேபனை தெரிவிக்கலாம் . பகுதி - 4 - ல் உள்ள 01 முதல் 31 வரையிலான கட்டாயத் தமிழ் மொழி பகுதியின் வினாக்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் மாற்றுத் திறன் படைத்த தேர்வர்கள் ( PWD candidates ) தெரிவிக்கக் கூடாது.
மேலும் , பாட வல்லுநர்களின் முடிவே இறுதியானது என்று அறிவிக்கப்படுகின்றது
candidates are instructed to follow the procedure as follows:
Step 1 – Click the link provided in the website
Step 2 – Login into the candidate Dashboard using registration id & password.
Step 3 – Click the objection tracker icon. .
Step 4 – Read the instructions carefully and accept the declaration.
Step 5 – To view the Question paper ( “A” series question paper) – “Click here to view ‘A’ series Question Paper”.
Step 6 – Read the instructions carefully before raising the objections.
Step 7 – Raise the objections in the given field.
Step 8 – Upload the supporting document and click Save and Submit.
Step 9 – After Successful OTP verification, the system will move to the applicant OT landing page.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி