விஜயதசமி நாளன்று அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி. வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தம் 2, 381 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் செயல்பட்டு வருகின்றன. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு, தனியார் பள்ளிகளைப் போலவே ஆண்டுதோறும் விஜயதசமி நாளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி மற்றும் ஒன்றாம் வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், செவ்வாயன்று விஜயதசமி நாளில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடத்திட தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள், பள்ளிகளுக்கு சென்று மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நாளில் குழந்தைகளுக்கான கல்வியை தொடங்கினால் அவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள் என்ற நம்பிக்கையால் பள்ளியில் சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டி வருகின்றனர்
எதற்கும் உதவாத எண்ணும் எழுத்தும் திட்டம், தற்காலிக ஆசிரியர் பணியிடம் இப்படி ஆயிரத்தெட்டு குறைபாடுகள் இருக்கும் அரசு பள்ளிகளில் மையிருல சேருவாங்க.... போங்கடா நீங்களும் உங்க அரசு பள்ளியும்.....
ReplyDeleteஎண்ணும் எழுத்தும் திட்டம் நன்றாக தான் உள்ளது. கற்பிக்கும் திறன் மற்றும் கற்பிக்கும் ஆவல் இல்லாத ஆசிரியர்கள் மட்டும் தான் இப்படி குறை கூறி கொண்டே இருப்பார்கள்.
Deleteநான் ஆசிரியர் அல்ல...என் இரு மகள்களையும் அரசு பள்ளிகளில் தான் சேர்த்தேன்.... எப்பொழுது பார்த்தாலும் காகித்தை வெட்டுவதும் வண்ணம் தீட்டுவதும் கேட்டால் பயிற்சி புத்தகம் என்று கூறுவார்கள்.... பார்த்தேன் இது போன்ற படிப்பு எதிர்காலத்திற்கு பலனளிக்காது என்று தனியார் பள்ளிகளில் சேர்த்தேன்.... இப்போது சரளமாக படிக்கிறார்கள்... எழுதவும் செய்கிறார்கள்.... எண்ணும் எழுத்தும் ஒரு நல்ல திட்டம் என்றால் அதை ஏன் தனியார் பள்ளிகளில் நடைமுறை படுத்த வில்லை????? இவ்வளவு வக்கனயஆ பேசுகிறீர்கள் உங்கள் குழந்தைகள் எல்லாம் அரசு பள்ளிகளில் ஆஆஆஆ படிக்கிறார்கள்!!!!!
Deleteநானும் ஆசிரியர் இல்லை. நீர் உங்கள் பண திமிரை காட்டுவதற்காக உங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்த்து இருக்கிறீர்கள். என் பிள்ளை அரசு பள்ளியில் தான் படிக்குறாங்க. எண்ணும் எழுத்தும் திட்டம் மூலமாக சரளமாக ஆங்கிலம் படிக்குறார்கள். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் வாயை மூடி கொண்டு அமைதியாக இருக்கவும்.
DeleteUnkown@ All pass scheme la niraya students basic padika theriyathavanga 8-10 classla irukanga. Antha nilamai ini vara Koodathu enbatharkaga.. Kondu varapata thitam thaan ithu. Kaasu ulavan private school layim, tuution anupuvanga avangellam nalla eludha padika theriyum. Govt school students apadi ila.
ReplyDeleteAvaru govt teacher ah than iruparu. Ennum eluthum thittathunala op adika mudiathula antha erichala than ipadi pesuraru.
Deleteஎண்ணும் எழுத்தும் திட்டத்தால் சராசரி மாணவர்கள் பயனடைகிறார்கள் மீத்திறன் மாணவர்களுக்கு பாதிப்புதான்.Exam எழுதும் திறன் போய்விட்டது.
ReplyDelete