சற்றுமுன்: பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிக வாபஸ்.... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 5, 2023

சற்றுமுன்: பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிக வாபஸ்....

பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிக வாபஸ் 


தமிழக அரசு பள்ளிகளில் 12 ஆண்டுகளாக 10ஆயிரம் ஊதியத்தில் பகுதிநேர ஆசிரியர்களாக பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சென்னையில் 11 நாட்களாக  போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

போராடிய ஆசிரியர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டு சமுதாய நலக்கூடங்களில் வைக்கப்பட்ட நிலையில், தங்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.

பல்வேறு தரப்பினரின் ஆதரவுடன் மீண்டும் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் என்றும் தகவல்.

இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள் தங்கள் போராட்டம் தொடரும் என்று அந்தந்த ஆசிரியர் சங்கங்கள் அறிவிப்பு.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி