எட்டாவது ஊதியக் குழு அடிப்படையில் ஊதியம் எவ்வளவு உயரும்? ஒரு மாதிரி கணக்கீடு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 17, 2023

எட்டாவது ஊதியக் குழு அடிப்படையில் ஊதியம் எவ்வளவு உயரும்? ஒரு மாதிரி கணக்கீடு!

31.12.2025 அன்று ஒருவரின் அடிப்படை ஊதியம் ரூ 90,000 என வைத்துக் கொள்வோம். அன்றைய தேதியில் DA 62% ஆக இருக்கக் கூடும்.


PAY + 62% DA ஆக மொத்தம் 90,000 + 55,800 = 1,45,800.


8 வது ஊதியக் குழு குறைந்த பட்ச fitment formula 1.9 ஆக இருக்கும் என கருதப் படுகிறது. Fitment formula இதைவிட சற்று உயர்ந்தாலும் உயரலாம்.


ஊதிய நிர்ணயம்:


31.12.2025 அன்று அடிப்படை ஊதியம் 90,000.


Fitment formula 1.9 ஆல் பெருக்க வேண்டும்.


90,000 X 1.9 = 1,71,000


என ஊதியம் நிர்ணயம் செய்யப் படும்.


01.01.2026 முதல் 31.06.2026 வரை 6 மாதங்களுக்கு மட்டும் DA 0% ஆக இருக்கும்.


01.01.2026 அன்று ஊதியம் + DA விவரம்:


1,71,000 + 0 = 1,71,000.


ஊதிய குழுவினால் கிடைக்கும் அதிகப் படியான ஊதியம்:


1,71,000 - 1,45,800 = 25,200.


HRA, CCA, MA போன்ற படிகள் உயர்வினால் ரூ 5000 வரை கூடுதலாக கிடைக்கலாம்.


ஆக மொத்தம், ஊதியக் குழு நடைமுறைக்கு வந்தால் ரூ 30,000 வரை ஊதியம் கூடுதலாக கிடைக்கலாம்.


அவரவர் ஊதிய நிலைக்கேற்ப ஊதியம் சற்று கூடுதலாகவோ அல்லது சற்று குறைவாகவோ கிடைக்கலாம்.


மேற்கண்ட கணக்கீடு விவரங்கள் ஒரு மாதிரிக்காகவும், தற்போது VRS மன நிலையில் உள்ளவர்கள் மேற்கண்ட கணக்கீடுகள் மூலம் தெளிவாக முடிவெடுக்க உதவியாக இருக்கும் என்ற நோக்கத்தில் மட்டுமே பகிரப் படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி