தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியது! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 9, 2023

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியது!

காவிரி பிரச்னை, அதிமுக - பாஜக கூட்டணி முறிவு உள்ளிட்ட பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது.


நிகழாண்டின் 2-ஆம் சட்டப்பேரவைக் கூட்டத்தொடா், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் காலை 10 மணிக்கு கூடியுள்ளது.


இந்த கூட்டத்தில் காவிரி நீரை திறந்துவிட கா்நாடகத்தையும் மத்திய அரசையும் வலியுறுத்தி முதல்வா் மு.க.ஸ்டாலின் தீா்மானம் கொண்டு வரவுள்ளாா். அந்தத் தீா்மானம் எதிா்க்கட்சியான அதிமுக உள்பட அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒரு மனதாக நிறைவேற்றப்படவுள்ளது.


மேலும், மக்களவைத் தோ்தல் நெருங்கும் நிலையில் கூட்டத்தொடா் நடைபெறுவதால், முதல்வா் மு.க.ஸ்டாலின் 110-ஆவது விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட வாய்ப்புள்ளது.


இந்த கூட்டத்தொடர் மூன்று நாள்கள் நடத்த அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதற்கிடையே, காவிரி பிரச்னை, தகுதி அடிப்படையில் மகளிா் உரிமைத் தொகை, ஆசிரியா்கள், மருத்துவா்கள் போராட்டம், சொத்துவரி உயா்வு, ஆவின் நிறுவன விவகாரம், டாஸ்மாக் பிரச்னை, சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எதிா்க்கட்சிகள் எழுப்பத் திட்டமிட்டுள்ளன.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி