PENSION கோரி ஒரு இலட்சம்பேர் தமிழ்நாடு CM-ன் இல்லத்தை முற்றுகையிட CPS ஒழிப்பு இயக்கம் அறைகூவல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 28, 2023

PENSION கோரி ஒரு இலட்சம்பேர் தமிழ்நாடு CM-ன் இல்லத்தை முற்றுகையிட CPS ஒழிப்பு இயக்கம் அறைகூவல்!

 

திமுக-வின் தேர்தல் கால வாக்குறுதியான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கையான பழைய ஓய்வூதியத்  திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி, CPS ஒழிப்பு இயக்கத்தின் சார்பில்  இன்று (28.10.2023) திருச்சியில் நடைபெற்ற போராட்ட ஆயத்த மாநாட்டில் 4 கட்டப் போராட்டங்களுக்கு அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.


18.11.2023 :

மாவட்டத் தலைநகரங்களில் குடும்பத்தோடு பட்டினிப் போராட்டம்.


27.12.2023 :

மாவட்டத் தலைநகரங்களில் மறியல்.


23 & 24.01.2024 :

2 நாள்கள் தற்செயல் விடுப்புப் போராட்டம்.


08.02.2024 :

புதிய ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் இல்லத்தை முற்றுகையிடுவது.


நிறைவாக, CPS பாதிப்பிலுள்ளோர் போராட்டக் களம் நோக்கிப் படையெடுக்க வேண்டுமாறு TNGEA & TNRDOAவின் மேனாள் மாநிலத்  தலைவரும், JACTTO-GEOவின் மேனாள் மாநில ஒருங்கிணைப்பாளரும், CPS ஒழிப்பு இயக்க மாநில ஆலோசகருமான தோழர் மு.சுப்பிரமணியன் நிறைவுரையாற்றினார்.

2 comments:

  1. மறியல் போராட்டம் என்று அறிவிப்பது மக்களை அரசு அதிகாரிகள் பணியாளர்களுக்கு எதிராக எளிதில் திருப்பக் கூடும். கவனமின்றி மறியல் என்று போராட்ட அறிவிப்பு செய்வதற்கு முன்பு மக்களை தன் பக்கம் கொண்டு இல்லாவிடில் இந்த அரசு வருகின்ற தேர்தலில் இந்த உணர்வை அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வார்கள் என்பது உறுதி. நான் இந்த செயலை தற்போது இருக்கும் அரசுக்கு சாதகமாக நடந்து கொள்வதாகவே எண்ணுகின்றேன் இப்படிக்கு மக்களில் ஒருவனாக கடந்த கால போராட்டத்தை அரசு கையாண்ட விதத்தை கண்டு உணர்ந்தவன்

    ReplyDelete
  2. கையலுத்து வாங்குதல், காலெளுத்து வாங்குதல். கறுப்பு பேட்ஜ் அணிதல், ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுப்பது, மாலை 5 மணிக்கு மேல் அரசு அலுவலகங்களுக்கு முன் கோரிக்கை முழங்குதல், மாவட்ட அளவில் உண்ணாவிரதம் என நல்லா பண்றீங்க காமெடி, இதுவே அதிமுக ஆட்சியாக இருந்து இருந்தால் இவ்வளவு நேரம் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்து இருப்பீர்கள். நல்ல முட்டால் ஆக்குகிரீர்கள் நிர்வாகிகளே. உங்கள் போதைக்கு நாங்கள் ஊருகாயா. போங்க அய்யா நீங்களும் உங்கள் போராட்டமும். உங்கள் கையெல்த்துக்கு இருக்கிறது மதிப்பை கெடுக்க வேண்டாம். நமது கையலுத்தை பார்ப்பது தான் நமது முதல்வரின் வேலையா?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி