School Morning Prayer Activities - 17.10.2023 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 16, 2023

School Morning Prayer Activities - 17.10.2023

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 17.10.2023


 திருக்குறள்


பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : கூடா ஒழுக்கம்

குறள் :279


கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன

வினைபடு பாலால் கொளல்.


விளக்கம்:


வடிவால் நேரானது என்றாலும் செயலால் அம்பு கொடியது. கழுத்தால் வளைந்தது ஆயினும் செயலால் யாழ் இனிது. அதனால் தோற்றத்தால் அன்றிச் செயலால் மனிதரை எடை போடுக.


பழமொழி :

Eagles do not catch flies


புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது


இரண்டொழுக்க பண்புகள் :


1. ஊக்கமுடன் உழைத்தால் ஆக்கம் தானாக வரும். எனவே எனது செயல்களை ஊக்கமுடன் செய்வேன். 


2. முயன்றால் பட்டாம்பூச்சி முயலாவிட்டால் கம்பளிப்பூச்சி. எனவே சோர்ந்து போகாமல் முயற்சி செய்வேன்.


பொன்மொழி :


உன் உணவுப் பழக்கத்தைக் சொல். உன் குணத்தைப் சொல்கிறேன்.-- பிரான்ஸ்


பொது அறிவு :


1. அமெரிக்க இந்தியர்களின் மிக நேர்த்தியான நாகரிகம் - 


இன்கா நாகரிகம்


2. இந்தியாவிலேயே எந்த மாநிலத்தில் அரசு போக்குவரத்து பேருந்துகள் அதிகம் ஒடுகின்றது?

 தமிழ்நாடு.


English words & meanings :


 envy-a feeling of discontented or resentful, பொறாமை. Scar- a mark left on the skin caused due to wound burn or sore, வடு


ஆரோக்ய வாழ்வு : 


சங்குப்பூ: வெள்ளை பூ பூக்கும் தாவரத்திற்கு மருத்துவ பயன் அதிகமாக உள்ளதாக நமது மருத்துவ முறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. சங்குப்பூ சங்கு புஷ்பம், மாமூலி, கன்னிக் கொடி, காக்கணம், காக்கரட்டான் போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. 


அக்டோபர் 17 இன்று


உலக வறுமை ஒழிப்பு நாள்

உலக வறுமை ஒழிப்பு நாள் (International Day for the Eradication of Poverty) ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 17 ஆம் நாள் உலகமுழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகளாவிய ரீதியில் வறுமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி பசிப்பிணியில் இருந்து மக்களை விடுவிப்பதற்காக ஐக்கிய நாடுகள் அமைப்பு 1992 ஆம் ஆண்டு வறுமை ஒழிப்பு நாளை அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டது.


உலகில் வறுமை நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ வேண்டியதன் அவசியம் குறித்து அனைத்து தரப்பினரின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் வறுமை ஒழிப்பு தினத்தில் பல்வேறு வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நாள் 1987 ஆம் ஆண்டு முதன் முதலாக பிரான்சின் பாரிஸ் நகரில் கடைப்பிடிக்கப்பட்டது. பசி, வறுமை, வன்முறை, பயம் என்பவற்றுக் பழியானோரை கௌரவிக்கும் வைகையில் 100,000 மக்கள் டொர்கேட்ரோவின் மனித உரிமைகள் மற்றும் விடுதலை சதுக்கத்தில் ஒன்றுகூடினார்கள்.


நீதிக்கதை


 கல்விதான் நமக்கு செல்வம்


மரகதபுரி என்னும் ஒரு நாடு இருந்தது. அந்த நாட்டை கோசலன் என்னும் மன்னன் ஆண்டு கொண்டு இருந்தான். அவன் அதிகமாக கல்வி அறிவு இல்லாதவன்.ஆனால் அவன் தந்தை நல்ல கல்வி அறிவு பெற்றவராக இருந்ததால் இவனையும் கல்வி கற்க குருகுல வாசகத்துக்கு அனுப்பினார். என் தந்தைதான் மன்னர், அதற்கடுத்து நான்தான் மன்னராவேன், அப்புறம் எதற்கு படிக்கவேண்டும்? என்று குருவிடம் விதண்டாவாதம் செய்தான். குருவும் எத்தனையோ சொல்லிப்பார்த்தார். கல்வி என்பது மற்றவர்களை விட ஆளப்போகும் மன்னனுக்கு முக்கியம் என்று, இவன் கேட்காமல், குருவுக்கு தெரியாமல் அரண்மனைக்கு வந்துவிட்டான். அவன் தந்தையும் எத்தனையோ அறிவுரைகள் சொன்னார். கடைசி வரை இவன் கேட்கவேயில்லை. இந்த வருத்தத்திலேயே மன்னர் நோய்வாய்ப்பட்டு சிறிது காலத்துக்குள் இறந்து விட்டார். வாரிசுப்படி கோசலன் மன்னனாக முடிசூடப்பட்டான்.


கல்வி இல்லாமலேயே நான் மன்னனாகிவிட்டேன் என்ற கர்வம் அவனிடம் ஏற்பட்டது. தந்தையிடம் பணிபுரிந்து கொண்டிருந்த அனைத்து சான்றோர்களையும், வீட்டுக்கு அனுப்பி விட்டு அவனைப்போல் கல்வி கற்காமல் இருப்பவர்களையே மந்திரிகளாகவும்,நண்பர்களாகவும் வைத்துக்கொண்டான்.படித்தவர்களை இவனது வேலைக்காரர்களாகவும், வீரர்களாகவும் வைத்துக்கொண்டான்.இதனால் தினமும் நடைபெரும் மந்திரி சபை வெறும் பாட்டும் கேலியுமாகவே நடந்து கொண்டிருந்தது.


இது எதுவும் அறியாத புலவர் ஒருவர் மன்னனை காண வந்தார். காப்பவனாக நின்று கொண்டிருந்த வீரன்  ஐயா நீர் ஒரு புலவர், நன்கு கற்றவர், ஆனால் நீர் பார்க்கப்போகும் மன்னர் அதிகம் கல்வி கற்காதவர், அது போல் மந்திரி சபையில் உள்ளவர்கள் அனைவரும் கல்வி அறிவு அற்றவர்கள். அதனால் அங்கு உங்களுக்கு ஏதேனும் அவமானம் ஏற்படலாம். ஆதலால் தயவு செய்து இங்கிருந்து சென்று விடுங்கள் என்று சொன்னான். அதைக்கேட்ட புலவர் உன் அறிவுரைக்கு நன்றி. ஆனால் நான் மன்னனைக் கண்டிப்பாக காணவேண்டும் என வற்புறுத்தினார். வேறு வழியில்லாமல் வாயிற்காப்போன் அரசரிடம் கூற புலவரை அழைத்தார். உள்ளே நுழைந்த புலவரை அரசர் யார்? எதற்காக என்னைக்காண வந்தீர்கள்? என்றார். மன்னனை கண்டவுடன் புலவர் மன்னரே வணக்கம் என்றார்.  ஐயா நான் ஒரு புலவன். தங்களை ஒரு விசயமாக காண வந்துள்ளேன், என்று சொல்லவும், மன்னர்  உம்மைப்போல மேதாவிகளுக்கு என்னிடம் என்ன வேலை? காலத்தை வீணடித்துக்கொண்டு இருக்கும் உம்மைப்போன்ற புலவர்களை உள்ளேயே விட கூடாது என அறிவுரை சொல்லியும் உம்மை உள்ளே அனுப்பியது யார்? முதலில் அவனை உள்ளே வரச்சொலலுங்கள் என உத்தரவிட்டார்.


புலவர் பதறி மன்னா சற்று பொறுங்கள்,நான்தான் அவசரமாக வந்துவிட்டேன்.பக்கத்து நாட்டு அரசர் இந்த ஓலையை கொடுத்தார் என கூறினார்.அரசர் மந்திரியிடம் கொடுத்து இதில் என்ன எழுதிஉள்ளது என கேட்க மந்திரி படிக்காதவராகையால் எனக்கும் புரியவில்லை மன்னா என்று தலையை சொறிந்தார்.புலவரே அதில் என்ன எழுதி இருக்கிறது என்பதை நீரே கூறும் என கேட்டார்.


மன்னா என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் கண்டிப்பாக படித்து சொல்லக்கூடாது, அப்படிச்சொன்னால் அதன் பலன் மன்னனுக்கு கிடைக்காமல் போய்விடும். இதை மன்னன் தானாக புரிந்து கொண்டால் அவனுக்கும் செல்வங்கள் வந்து குவியும் என்று சொன்னார். இல்லை என்றால் அவருக்கு அழிவுதான் என்றும் சொல்லிவிட்டார். மன்னியுங்கள் மன்னா, நான் வருகிறேன் எனது கடமை முடிந்தது என்று சொல்லி விடைபெற்றுக்கொண்டார். ஓலையை வாங்கிய மன்னனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை, அங்கிருந்த அனைவருக்குமே கல்வி அறிவு குறைவாக இருந்ததால் ஓலையில் என்ன எழுதி உள்ளது என்று படிக்க முடியவில்லை. மன்னன் ஒரு வீரனை அழைத்தான்.வீரனிடம் இந்த  ஓலையை கொடுத்து யாராவது இந்த ஓலையை படித்து மன்னனுக்கு விளக்குபவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கும்படி சொன்னான். வீரன் அதன்படி அரண்மனையை விட்டு வெளியே வந்து யாராவது ஓலையை படித்து மன்னனுக்கு விளக்கினால் பரிசுத்தொகை அளிக்கப்படும் என அறிவித்தான்.


மன்னனைப்பற்றி தெரியுமாதலால் யாரும் அந்த ஓலையைப்படித்து விளக்கம் அளிக்க முன்வரவில்லை. அவமானமாயிற்று. மன்னனுக்கு இந்த ஓலையை படிக்க நம் நாட்டில் யாருமில்லையா?முதன் முதலாக கல்வியின் அருமையை  உணரத்தொடங்கினான். தன் முன்னர் பணிபுரிந்த மந்திரியாரை அழைத்துவரச்சொன்னார்.அவர் மன்னரை காண அரண்மனைக்கு வந்தார்.


ஐயா நீங்களாவது இந்த ஓலையை படித்துஎனக்கு விளக்கமளிக்கக்கூடாதா? என்று கேட்டான்.மந்திரியாரும் அந்த ஓலையை வாங்கிப்பார்த்தார்.சிறிது   நேரம் வாசித்து பார்த்தவர் திடீரென்று அகலமான  கண்ணாடியை கொண்டு வரச்சொன்னார். மன்னனும் எதுவும் புரியாமல் ஒரு கண்ணாடியை கொண்டு வரச்சொன்னான். கண்ணாடி வந்தவுடன் மந்திரியார் மன்னா இப்பொழுது கண்ணாடியில் உள்ளதை படியுங்கள் என்று அதில்ஓலையை கண்ணாடி முன்னால் காட்ட அதில் கல்வி அறிவைப்பற்றிய திருக்குறள்கள் வரிசையாக எழுதப்பட்டிருந்தது.


மன்னன் வெட்கத்துடன் மந்திரியாரே எனக்கு படிக்கத்தெரியவில்லை தயவு செய்து படித்து காட்டும் என்று கேட்டான்.மந்திரியாரும் வாசித்து அவனுக்கு விளக்கம் சொன்னார்.


மன்னன் "என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் மந்திரியாரே, கல்வி என்பது ஒரு செல்வம். என்பதை  புரிந்து கொண்டேன்". இனி இந்த நாடு முழுவதும் அனைவரும் கல்வி கற்க நானும் ஏற்பாடு செய்வேன். நானும் உங்களைப்போல உள்ள சான்றோரிடம் கல்வி கற்றுக்கொள்ளப்போகிறேன்.ஒரு நாட்டின் வளமைக்கும்,வளர்ச்சிக்கும்,  ல்விதான் என்பதை புரிந்து கொண்டேன் என்றார் அரசர்.


இன்றைய செய்திகள் - 17.10.2023


*மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் "ககன்யான்" - சோதனையோட்டம் நடைபெறும் தேதியை அறிவித்தது- இஸ்ரோ 


*தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் நாளை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


*உலக வங்கி உதவியுடன் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1773 கோடியில் உரிமைகள் திட்டம்: முதலமைச்சர் தகவல்.


*நிச்சயம் ஸ்ரீஹரிகோட்டா செல்வேன். இஸ்ரோ தலைவரை சந்தித்தபின் பிரக்ஞானந்தா பேட்டி.


*ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க கோலி தான் காரணம் - லாஸ் ஏஞ்சல்ஸ் விளையாட்டு இயக்குனர் புகழாரம்.


*2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் உள்பட 5 புதிய விளையாட்டுகள் இணைப்பு.


Today's Headlines


*Manned Spacecraft "Kaganyan" - Launch Date Announced - ISRO


 *Light to moderate rain with thunder and lightning at a few places over Tamil Nadu, Puducherry, and Karaikal tomorrow.


 * With World Bank assistance Rs.  1773 Crore Entitlement Scheme: Chief Minister Information.


 I will definitely go to Sriharikota.  Pragnananda interview after meeting ISRO chief.


 *Koli was the reason cricket was included in the Olympics - Los Angeles sports director praises.


 * 5 new sports including cricket in the Olympics in 2028 link.


 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி