வேலை இல்லாத 200 பதவிகள் நீக்கம்: பள்ளி கல்வித்துறைக்கு அறிவுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 24, 2023

வேலை இல்லாத 200 பதவிகள் நீக்கம்: பள்ளி கல்வித்துறைக்கு அறிவுறுத்தல்

 

பணி ஒதுக்கீடு இல்லாத, 200க்கும் மேற்பட்ட பதவிகளை, நியமன பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய, பள்ளி கல்வித்துறைக்கு தமிழக நிதித்துறை உத்தரவிட்டுள்ளது.


தமிழகத்தில் ஒவ்வொரு அரசு துறையிலும், துறை ரீதியான பணிகளை மேற்கொள்ள பல்வேறு பதவிகள் உள்ளன. இவை அந்தந்த துறைகளுக்கு தேவையான பணிகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளன.


தமிழக பள்ளி கல்வித்துறையில், பல்வேறு பணிகள் அடிப்படையில், 350 பதவிகள் நியமன பட்டியலில் உள்ளன. இவை கடந்த, 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ளன. இவற்றில், தற்போதைய தேவைகள் அடிப்படையில், பழைய, புதிய பதவிகள் குறித்து, தமிழக மனிதவள மேலாண்மை துறை ஆய்வு செய்துள்ளது.


இதுகுறித்து, தமிழக நிதித்துறை அதிகாரிகளும் ஆலோசனை நடத்தி, பணிகள் இல்லாத மற்றும் ஒரே பணிக்கு கூடுதலாக உள்ள பதவிகளை, நியமன பட்டியலில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி, தமிழக பள்ளி கல்வித்துறையில் தற்போதுள்ள, 350 பதவிகளை ஆய்வு செய்து, அவற்றில், தேவையில்லாமலும், உபரியாகவும் உள்ள, 200 பதவிகளை நீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. நீக்கம் செய்யப்படும் பதவிகளுக்கான பணியிடங்களை, தற்போது தேவைப்படக்கூடிய பதவிகளை, இணையான வேறு பதவி பட்டியலில் இணைத்து கொள்ளலாம் என்றும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.

1 comment:

  1. கடைசி வரைக்கும் என்ன பதவியின்னு சொல்லவே இல்லை 🙄

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி