முதல்வர் ஸ்டாலின் அறிவித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நேற்று ஊழியர் சந்திப்பு எனும் பிரசார இயக்கத்தை துவக்கியுள்ளனர்.
அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் சங்கங்கள் இணைந்த ஜாக்டோ ஜியோ அமைப்பு புதிய பென்ஷன் திட்டம் ரத்து, முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பது குறித்து நீண்ட காலமாக போராடி வருகின்றனர். இந்நிலையில் நேற்று நவ.,15 முதல் 24 வரை அரசு அலுவலகங்களில் ஊழியர்களை சந்தித்து போராட்டம் குறித்து பிரசார இயக்கம் மேற்கொண்டனர்.
மாநில ஒருங்கிணைப்பாளர்கள் செல்வம், முருகையன் உள்பட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 5 குழுக்களாக மாவட்டம் முழுவதும் அரசு அலுவலகங்களில் பிரசாரம் செய்தனர். அவர்கள் கூறியதாவது: முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதியை அமல்படுத்த பல்வேறு இயக்கங்கள் நடத்தியும் தீர்வு கிடைக்கவில்லை. எனவே இரண்டாவது கட்ட இயக்கமாக இதனை துவக்கி உள்ளோம். அடுத்து நவ. 25ல் மாவட்ட தலைநகரங்களில் மறியல் நடத்த உள்ளோம்.
அரசு ஊழியர், பணியாளர், ஆசிரியர்கள் சங்கங்களை அரசு அழைத்து பேச வேண்டும். ஏப்.,8 ல் மூன்று அமைச்சர்கள் பேசியதால் கோட்டை முற்றுகை போராட்டத்தை ஒத்தி வைத்தோம். ஐந்து மாதங்களாகியும் பலனில்லாததால் டிச.,28 ல் மீண்டும் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளோம் என்றனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி