சிதம்பரம் அண்ணாமலை பல்கலை.யில் பல்வேறு துறைகளில் தேவைக்கும் அதிகமாகபணி நியமனங்கள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், நிர்வாகப் பிரச்சினையால் 2012-ல் பல்கலை.யில் நிதிச் சிக்கல் ஏற்பட்டது.இதையடுத்து, அதே ஆண்டுஇறுதியில், பல்கலை. தனி அலுவலராக அரசின் முதன்மைச்செயலராக இருந்த சிவதாஸ்மீனா தமிழக அரசால் நியமிக்கப்பட்டார்.
அவர் அளித்த அறிக்கையின்படி, 2013-ல் தமிழகமுதல்வராக இருந்த ஜெயலலிதா, பல்கலைக் கழகத்தை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார். தொடர்ந்து, பல்கலைக்கழகத்தை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்ட சிவதாஸ்மீனா, மற்றொரு அறிக்கையை அரசுக்குச் சமர்ப்பித்தார்.
அதில், பல்கலை.யில் அதிக எண்ணிக்கையிலான பேராசிரியர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் உள்ளனர். அவர்களை தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கு பணி நிரவல் செய்தால், நிதிச் சிக்கல் தீரும் என்று தெரிவித் திருந்தார்.
இந்நிலையில், தமிழக அரசால் நியமிக்கப்பட்ட துணைவேந்தரின் கட்டுப்பாட்டுக்கு அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகம் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, 2014 முதல் கடந்த 9 ஆண்டுகளாக பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், அலுவலக உதவியாளர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர், தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசுக் கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், தலைமைச் செயலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு பணிநிரவல் செய்யப்பட்டனர்.
பின்னர், பல்கலை.யில் தணிக்கைக் குழு ஆய்வு மேற்கொண்ட போது, உரிய கல்வித்தகுதி இல்லாமல் பல்வேறு துறைகளில் உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக பல்கலை. சிண்டிகேட் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, உயர் கல்வித் துறைக்கு தகவல் தெரிவித்து, அதன் வழிகாட்டுதல்படி, மேலாண்மை (எம்பிஏ), பொருளாதாரம், வரலாறு, கணினி அறிவியல்ஆகிய துறைகளைச் சேர்ந்த56 உதவிப் பேராசிரியர்களை பணி நீக்கம் செய்து, பல்கலைக்கழக நிர்வாகம் நேற்று முன்தினம் இரவு உத்தரவு அனுப்பியது.
இந்த 56 உதவிப் பேராசிரியர்களில் 38 பேர் பணி நிரவல்அடிப்படையில் பல்வேறு கல்லூரிகளில் பணியாற்றி வருகின்றனர். 18 உதவிப் பேராசிரியர்கள் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி