ஆசிரியர் பணி தேர்வு ரத்து கோரி போராட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 18, 2023

ஆசிரியர் பணி தேர்வு ரத்து கோரி போராட்டம்

ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வை ரத்து செய்து, 'வெயிட்டேஜ்' முறையில் பணி நியமனம் வழங்க கோரி, பட்டதாரிகள் போராட்டம் அறிவித்துள்ளனர்.


அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியில், 2,582 காலியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜனவரி, 7ல் இந்த தேர்வு நடத்தப்படும் என, கூறப்பட்டுள்ளது.


இந்நிலையில், போட்டி தேர்வின்றி, ஆசிரியர் தகுதி தேர்வு மதிப்பெண் அடிப்படையில், பணி நியமனம் மேற்கொள்ள வேண்டும் என, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நலச்சங்கம் அறிவித்துள்ளது.


இதை வலியுறுத்தி, 23ம் தேதி சென்னையில் எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் முன், உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என,அறிவிக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. ஆரம்பத்தில் இருந்தே மதிப்பெண் அடிப்படையில் வேலை வழங்க போராடியிருந்தால் வாய்ப்பு இருந்திருக்கும்...

    ReplyDelete
    Replies
    1. 2013க்கு மட்டுமே முதலில் பணி நியமனம் செய்யுங்கள் என்று கேட்டதன் விளைவு தான் இந்த நியமனத் தேர்வு அறிவிப்பு....

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி