கல்விச்செய்தி வாசக நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 12, 2023

கல்விச்செய்தி வாசக நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ...

 

தீபஒளி - மலரட்டும் மாற்றங்கள்

இன்பம் கொடுக்கும்

இனிய தீபஒளி

திருநாள் இன்று

இந் நன்னாளில்


இல்லங்கள் தோறும்

இனிக்கும் இனிப்புகள்

இதயங்களில் அன்பின்

சுவையினை பரிமாறட்டும்!


விண்ணில் சீரும் பட்டாசுகள்

மதம்பிடித்த பதர்களின் உள்ளத்தை

சிதறும் மனிதமெனும்

நெருப்பால் பொசுக்கட்டும்!


எத்திசையும் பாய்ந்து வரும்

தீபஒளிக் கீற்றுகள்

சாதி அறுத்து

சமூக இருள் போக்கட்டும்!


புறத்தே

புத்தாடை உடுத்தி

புதுஅலங்காரம் காணும்

மனித மனங்கள்


அகத்தே

இருள் நீங்க

சமத்துவ ஒளியேந்தி

புத்துலகம் படைக்கட்டும்!


அனைவருக்கும் இனிய தீபஒளி திருநாள் நல்வாழ்த்துகள்!

1 comment:

  1. விடியலலென்னும் அரக்கன் ஒழிந்து ஆசிரியர் சமுதாயத்திற்கு அனைத்து நன்மைகளும் கிட்ட இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..... அந்த சம்பவம் பாராளுமன்றத் தேர்தலில் தொடங்கட்டும் 🔥🔥🔥

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி