ஆசிரியர்கள் நடத்திய உண்ணாவிரத போராட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 25, 2023

ஆசிரியர்கள் நடத்திய உண்ணாவிரத போராட்டம்

தஞ்சாவூர் மாவட்ட தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் இன்று பனகல் கட்டிடம் முன்பு நடைபெற்றது.


இதற்கு மாவட்ட செயல் தலைவர் காத்த பெருமாள் தலைமை தாங்கினார்.


மாவட்ட அவைச்செயலாளர் தங்கவேல் முன்னிலை வகித்தார்.


மாவட்ட செயலாளர் சதீஷ் வரவேற்புரை ஆற்றினார்.


மாவட்டத் தலைவர்கள் ஆசைத்தம்பி, செந்தில்குமார் மற்றும் சுரேஷ் வாழ்த்துரை வழங்கினர்.


இதில் 10.06.2009 முதல் பணியேற்ற முதுகலையா சிரியர்கள் ஊதிய முரண்பாடு களைந்திட வேண்டும்.


2004-2006- ம் ஆண்டில் பணியேற்ற முதுகலையாசிரியர்களுக்கு பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன் முறை செய்திட வேண்டும்.


ஊக்க ஊதியத்திற்குப் பழைய நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்.


தன்பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தினை மாற்றி பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறை ப்படுத்திட வேண்டும்.


ஊக்க ஊதியம் பெறும் ஆசிரியர்களுக்குப் போடப்படும் முறையற்ற தணிக்கைத் தடையை நீக்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பலர் பேசினர்.


மேலும் அடுத்த கட்டமாக டிசம்பர் 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் சென்னையில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என முடிவெடுக்கப்பட்டது.


இந்த போராட்டத்தில் ஏராளமான சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

3 comments:

  1. சங்கிகள் எதுக்கு

    ReplyDelete
  2. ஒரு மயிரும் புடுங்க மாட்டானுக

    ReplyDelete
  3. மாதம் 10 லட்சம் தந்தால் போதுமா

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி