பள்ளிகளில் Emis ஆன்லைன் பணிகளை பார்க்க தற்காலிக ஊழியர்களை நியமிக்க பள்ளிகள் துறை திட்டம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 2, 2023

பள்ளிகளில் Emis ஆன்லைன் பணிகளை பார்க்க தற்காலிக ஊழியர்களை நியமிக்க பள்ளிகள் துறை திட்டம்.

 

பள்ளிகளில் Emis ஆன்லைன் பணிகளை பார்க்க மாவட்ட வாரியாக தற்காலிக ஊழியர்களை நியமிக்க பள்ளிகள் துறை திட்டமிட்டுள்ளது.


தமிழகத்தில் அரசின் நேரடி கட்டுப்பாட்டில் மாநிலம் முழுவதும் 24 ஆயிரம் தொடக்கப்பள்ளிகள் 7 ஆயிரம் நடுநிலைப்பள்ளிகள் 6 ஆயிரம் உயர்நிலை பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 37,000 அரசு பள்ளிகள் செயல்படுகின்றன...


இவற்றில் படிக்கும் 50 லட்சம் மாணவ மாணவியர்கள் 2.50 லட்சம் ஆசிரியர்கள் தொடர்பான வருகை பதிவு ,விடுப்பு பதிவுகள் , மாணவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் கற்றல் கற்பித்தல் பயிற்சி தேர்வுகள் உள்ளிட்டவை தொடர்பாக Emis என்ற ஆன்லைன் தளத்தில் தினமும் பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.


இந்த பதிவுகளை தாங்களே மேற்கொண்டு வருவதால் பாடம் நடத்த நேரமில்லை என ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் .மேலும் Emis ஆன்லைன் பதிவு பணிகளை மேற்கொள்ளாமல் நேற்று முதல் ஆன்லைன் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் Emis ஆன்லைன் பதிவு பணி  தொய் வடைந்துள்ளது.இந்நிலையில் Emis பணிகளை பார்க்க தற்காலிக ஒப்பந்த ஊழியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.


அதுவரை பகுதி நேர ஆசிரியர்களை பயன்படுத்தி Emis பணிகளை மேற்கொள்ள முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.



1 comment:

  1. EMIS ஆரம்பிக்கும் போதே அந்த பணியை இரவும் பகலும் பார்த்து வந்தது பகுதி நேர ஆசிரியர்கள் (கணினி) . ஆனால் இந்த பணியை ஒப்பந்தம் அடிப்படையில் தனியாக ஆட்களை நியமிக்கும் பணி நடைபெறும் வரை பகுதி நேர ஆசிரியர்கள் செய்ய வேண்டும் என்று உத்தரவு. ஏற்கனவே பார்த்த பகுதி நேர ஆசிரியர்களை விட்டு விட்டு இப்போது புதிய தற்காலிக பணியாளர்கள் நியமனம் செய்யப் போவதாக கூறுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயல். பகுதி நேர ஆசிரியர்கள் சொற்ப வருமானத்தில் செத்துக் கொண்டு இருக்கும் போது இப்படி ஏன் பள்ளிக் கல்வித் துறை நடந்து கொள்கிறது? அதிமுக அமைச்சர்கள் பரவாயில்லை என்று சொல்ல வைக்கும் அளவுக்கு இந்த அமைச்சர் நடந்து கொள்கிறார்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி