TET தேர்வு ஆசிரியர்கள் மீண்டும் போராட்டம் – அரசின் முடிவு என்ன? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 26, 2023

TET தேர்வு ஆசிரியர்கள் மீண்டும் போராட்டம் – அரசின் முடிவு என்ன?

 

வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் வழங்க கூடாது என மீண்டும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


டெட் தேர்வு:

தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு போட்டித் தேர்வு அடிப்படையில் மட்டுமே பணியிடம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஆசிரியர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆசிரியர்களிடம் கலந்து பேசி வேலைவாய்ப்பு பதிவு மூப்பு மற்றும் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.


ஆனால், ஆசிரியர்கள் அதனையும் மீறி வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்வதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதால் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். இது குறித்து முதல்வர் அவர்கள் கலந்தோசித்து அறிவிப்பினை வெளியிட வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

10 comments:

  1. Wrong information... Plz telecast real news...

    ReplyDelete
  2. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆசிரியர்களிடம் கலந்து பேசி வேலைவாய்ப்பு பதிவு மூப்பு மற்றும் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் நியமன தேர்வு அறிவிப்பு வெளியானது அதனால் போராடுகிறார்கள்... உண்மை செய்தியை பதிவிடுங்கள் கல்விச்செய்தி பிரமுகர்களே...

    ReplyDelete
  3. தயவு செய்து இது போன்ற பொய்யான தகவல்களை கல்வி செய்தியில் பதிவிடாதீர்கள்

    ReplyDelete
  4. தவறான செய்திகளை பரப்பி கொண்டிருக்கும் கல்வி செய்தி என்ற ஒரு Portal ஐ அறவே ஒழிக்க வேண்டும்

    ReplyDelete
  5. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அதில் தமிழ் தாள் 30 மதிப்பெண் எழுதியவர்கள் தானே அப்புறம் என்ன நியமன தேர்வில் மீண்டும் தமிழ் தகுதித் தேர்வு.அதிகாரிகளுக்கு இது கூட தெரியாதா?என்ன நியாயமோ போங்க இந்த நாடும் மக்களும்......

    ReplyDelete
  6. தேர்வு முறையே சரியான தீர்வு.....
    TET ஒரு தகுதி தேர்வு மட்டுமே...

    ReplyDelete
  7. போயி நியமன தேர்வுக்கு படிங்க

    ReplyDelete
  8. டேய் நாயே...உண்மையை பதிவிடு...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி