TNPSC - வேளாண்மை, தோட்டக்கலை துறையில் உதவி அலுவலர் பணி - விண்ணப்பிக்க டிசம்பர் 24ம் தேதி கடைசி நாள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 27, 2023

TNPSC - வேளாண்மை, தோட்டக்கலை துறையில் உதவி அலுவலர் பணி - விண்ணப்பிக்க டிசம்பர் 24ம் தேதி கடைசி நாள்!


தமிழ்நாடு வேளாண்மை, தோட்டக்கலை துறையில் காலியாக உள்ள 263 உதவி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. 

இதற்கு விண்ணப்பிக்க டிசம்பர் 24ம் தேதி கடைசி நாள். 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்க சார்நிலை பணிகளில் அடங்கிய உதவி வேளாண்மை அலுவலர் பணிகளில் 84 காலி பணியிடங்கள், தமிழ்நாடு தோட்டக்கலை சார்நிலை பணிகளில் அடங்கிய உதவி தோட்டக்கலை அலுவலர் பணியில் 179 காலி பணியிடங்கள் என 263 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பதவிக்கான தேர்வு கணினி வழியில் நடக்கும். இதற்கான தேர்வுக்கு வருகிற டிசம்பர் 24ம் தேதி வரை டிஎன்பிஎஸ்சியின் இணையதளம்(www.tnpsc.gov.in,www.tnpscexams.in) வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை டிசம்பர் 29ம் தேதி நள்ளிரவு 12.01 மணி முதல் டிசம்பர் 31ம் தேதி இரவு 11.59 மணி வரை திருத்தம் செய்யலாம். தேர்வுக்கான கணினி வழி தேர்வு பிப்ரவரி 7ம் தேதி நடைபெறுகிறது. 7ம் தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை முதல் தாள் தேர்வும்(பட்டயப்படிப்பு தரம்), பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இரண்டாம் தாள் தேர்வும் நடைபெறும். அதாவது பகுதி ‘‘அ”வில் கட்டாய தமிழ் மொழி தகுதி தேர்வும்(10ம் வகுப்பு தரம்), பகுதி ‘‘ஆ” பொது அறிவு(10ம் வகுப்பு தரம்) தேர்வும் நடக்கிறது. கணினி வழி தேர்வு சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், வேலூர் ஆகிய 7 மாவட்டங்களில் நடைபெறும். 

இதற்கான கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு கட்டணம் உள்ளிட்ட முழு விவரங்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி