முதல்வரின் நிவாரண நிதிக்கு தனிப்பட்ட ஊழியா்களின் ஒப்புதல் பெறாமல் ஒரு நாள் ஊதியத்தைப் பிடித்தம் செய்வதற்கு அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.
மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பலத்த மழை பெய்து, கடும் சேதம் ஏற்பட்டது. இதையடுத்து, நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதல்வா், சட்டப்பேரவை உறுப்பினா்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், ஐபிஎஸ் அதிகாரிகள், தனியாா் நிறுவனங்கள், தனியாா் அமைப்புகள் சாா்பிலும் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் சங்கங்கள், கூட்டமைப்புகள் சாா்பில் ஒரு நாள் ஊதியத்தை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.
சங்கத்தின் உறுப்பினா்களிடம் ஆலோசிக்காமல் நிா்வாகிகளின் தனிச்சையான இந்த முடிவுக்கு அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் மத்தியில் எதிா்ப்பு எழுந்துள்ளது.
இதுதொடா்பாக அரசு ஊழியா்கள் தரப்பில் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் சுமாா் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோா் ஆசிரியா்கள், அரசு ஊழியா்களாக பணிபுரிந்து வருகிறோம். சங்கத்தில் இடம் பெற்றிருந்தாலும், தனி நபரின் கருத்தைக் கேட்காமல், தங்களின் சுய விளம்பரத்துக்காக சில நிா்வாகிகள் முதல்வரின் நிவாரண நிதி தொடா்பாக தனிச்சையாக அறிவிப்பு வெளியிட்டிருக்கின்றனா்.
அரசு ஊழியா்களின் பிரதான கோரிக்கைகளான பழைய ஓய்வூதியத் திட்டம், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, ஊக்க ஊதிய உயா்வு, அகவிலைப்படி நிலுவை உள்ளிட்டவற்றுக்கு தீா்வு காணப்படவில்லை. தோ்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்ட இந்த கோரிக்கைகளை, ஆட்சிப் பொறுப்பேற்று 30 மாதங்களாகியும் இதுவரை நிறைவேற்றவில்லை. இதனால், அரசு ஊழியா்கள் பலரும் அதிருப்தியில் உள்ளனா்.
அரசின் நிவாரணப் பணிகளுக்கு உதவுவதில் மாற்றுக் கருத்தில்லை. முதல்வரின் நிவாரண நிதி வழங்க விருப்பக் கடிதம் வழங்கும் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களிடம் மட்டுமே ஊதியம் பெற்று வழங்கும் அலுவலரின் ஊதியத்திலும் பிடித்தம் செய்ய வேண்டும். சங்க நிா்வாகிகளின் தனிப்பட்ட விருப்பத்தை, ஒட்டுமொத்த ஊழியா்களும் ஏற்க முடியாது என்றனா்.
மிகச்சரியான முடிவு..
ReplyDeleteஏன் தரவேண்டும் இந்த அரசுக்கு..?
ReplyDeleteதனிப்பட்ட முறையில் நாம் மனிதன் என்ற அடிப்படையில் அரசு ஊழியர்கள் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனித நேய அடிப்படையில் கண்டிப்பாக உதவி செய்ய வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை ஆனால் அரசிற்கு நம் நிதியை ஒருபோதும் தரக்கூடாது இதன் மூலம் நம் எதிர்ப்பை காட்ட வேண்டும்
ReplyDeleteசுடலை தன் சொந்த காசை தரட்டும்
ReplyDeleteYes
ReplyDeleteநமது மாத சம்பளத்தில் ஒரு நாள் ஊதியத்தை அரசுக்கு
ReplyDeleteவழங்குவது
தொடர்பாக...
குடும்பத்தின் நிதி நிலையை கருத்தில் கொண்டு
படிப்படியாக வழங்கப்படும்...
மனைவி பிள்ளைகளின் கவனத்திற்கு கொண்டு சென்று ஒப்புதல் பெற்று தரப்படும்..
மனைவி குழந்தைகள்., மச்சான்., கொழுந்தியாள்
ஆகியோரை உறுப்பினர்களாக
கொண்ட குழு அமைக்கப்படும்..
மூன்று மாதத்தில் அறிக்கை பெற்று பரிசீலனை செய்யப்பட்டு
ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்ய ஒப்புதல் வழங்கப்படும்... ( இது தானே நடைமுறை..) 😳😳😔😔😂😂
விருப்பமுள்ளவர்கள் கொடுக்கலாம்
ReplyDeleteஎல்லோரையும் கட்டாயப்படுத்தக் கூடாது அதற்கு யாருக்கும் உரிமை இல்லை என் ஊதியத்தை பிடிக்கும் பொழுது என்னிடம் கேட்க வேண்டும்
ReplyDeleteஎன்னிடம் கேட்காமல் ஊதியம் ஊதிய பிடித்தம் செய்வது சட்ட விரோதம்
ReplyDeleteநாங்கள் நேரடியாக மக்களுக்கு உதவ தயார் ஆனால் இந்த அரசுக்கு கொடுக்க யாருக்கும் மனமில்லை. நீங்கள் யார் முடிவு செய்வதற்கு நாங்கள் தருகிறோம் பாதிக்கப்பட்ட என் மக்களுக்கு உதவி கரம் நீட்ட நாங்கள் தயார் ஆனால் இதனை இந்த அரசின் மூலம் செய்ய துணியும் கூட ஒட்டுமொத்த அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு சம்மதம் இல்லை .
ReplyDeleteமத்திய அரசு கொடுக்கும் 5000 கோடியை என்ன செய்வார்கள்
ReplyDeleteமிகச்சரியாக சொன்னீர்கள்
ReplyDelete