குறுகியகால எம்பிஏ படிப்புக்கு அனுமதியில்லை: மாணவர்களுக்கு ஏஐசிடிஇ எச்சரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 1, 2024

குறுகியகால எம்பிஏ படிப்புக்கு அனுமதியில்லை: மாணவர்களுக்கு ஏஐசிடிஇ எச்சரிக்கை

அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமத்தின் (ஏஐசிடிஇ) துணைத் தலைவர் அபய் ஜெரி வெளியிட்ட அறிவிப்பு:


சில தன்னம்பிக்கை பேச்சாளர்கள், 10 நாட்களில் குறுகிய கால எம்பிஏ படிப்பு, உடனடி வகுப்பை வழங்குவதாக கூறி மாணவர்களை ஏமாற்றி சேர்க்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இத்தகைய உடனடி எம்பிஏ படிப்புகள் (crash course) நாட்டின் இளைஞர்களை தவறாக வழிநடத்தும் முயற்சியாகும்.


உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, ஏஐசிடிஇ அனுமதியின்றி எந்த ஒரு உயர்கல்வி நிறுவனமும் எம்பிஏ உள்ளிட்ட மேலாண்மை மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளை நடத்தக்கூடாது. எம்பிஏ என்பது 2 ஆண்டு முதுநிலைப் படிப்பாகும். இது வணிகம் மற்றும் மேலாண்மைக் கூறுகளை பல்வேறு கோணங்களில் அறிந்து நவீன திறன்களை தனிநபர் அறிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டது.


அதனால், எம்பிஏ படிப்பை 10 நாட்களில் முடிக்க முடியாது. மாணவர்கள் அத்தகைய தவறான, மோசடியாக தகவல்களை நம்பி, அந்த படிப்புகளில் சேரவேண்டாம். இதுகுறித்த கூடுதல் தகவல்களை https://www.aicte-india.org/ எனும் வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி