சர்வதேச அறிவியல் கருத்தரங்கு அரசு பள்ளி ஆசிரியர் பங்கேற்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 28, 2024

சர்வதேச அறிவியல் கருத்தரங்கு அரசு பள்ளி ஆசிரியர் பங்கேற்பு

 

ஹரியானா மாநிலம், பரிதாபாத்தில் உள்ள மொழிமாற்ற சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் உயிரி தொழில்நுட்பத்துறையின் பிராந்திய மையத்தில், 9 வது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா கடந்த, 17 முதல், 20 வரை நடந்தது.பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், அமெரிக்கா உள்பட, 22 நாடுகள் பங்கேற்றன. இதில், அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் உள்பட, 17 அறிவியல் கருப்பொருள் சார்ந்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு சர்வதேச அளவில், 12 ஆயிரம் பேர் தேர்வு பெற்று கலந்துகொண்டனர்.


இங்கு ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கில், சர்வதேச அளவில் விண்ணப்பித்த, 587 ஆசிரியர்களில் இருந்து, 154 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதில், கரூர் மாவட்டம், பஞ்சப்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி இயற்பியல் ஆசிரியர் தனபால் தேர்வு பெற்றார். அவர், கருத்தரங்கில் கலந்துகொண்டு திரும்பியுள்ளார்.அவரை, கரூர் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் சுமதி பாராட்டினார். பள்ளி துணை ஆய்வாளர் சாந்தி, சமக்ர சிக் ஷா மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சரவணன், கல்யாணி, பெரியசாமி, செந்தில்குமார் ஆகியோர் வாழ்த்தினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி