இது குறித்து அவை வெளியிடுள்ள அரசாணையில் தெரிவித்து இருப்பதாவது:பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையரின் கருத்துக்களை அரசு ஆய்வு செய்து பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர், மற்றும் சிறுபான்மையினர் நல பள்ளி விடுதி மாணவ,மாணவியர்களின் உணவு கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்படி நபர் ஒன்றுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ. ஆயிரத்தில் இருந்து ரூ.1,400 ஆகவும், கல்லூரி விடுதிகளுக்கு ரூ.1,100ல் இருந்து ரூ.1,500 ஆகவும் உயர்த்தி நிர்வாக ஒப்புதல் வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.மேலும் உயர்த்தப்பட்டு உள்ள விடுதி உணவுக்கட்டணம் அரசாணை வெளியிடப்பட்ட நாள் முதல் நடைமுறைக்கு வருகிறது. விடுதி உணவுக்கட்டணம் உயர்த்தி வழங்குவதால் கடந்த ஆண்டு அக்., முதல் இந்தாண்டு மார்ச் வரையில் ஏற்படும் கூடுதல் தொகையான ரூ.9 கோடியே 56 லட்சத்து 17 ஆயிரத்து 200ஐ வழங்கவும் அரசு ஆணையிட்டு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி