கிராம சபை கூட்டத்தில் பள்ளிகள் குறித்து பேச உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 16, 2024

கிராம சபை கூட்டத்தில் பள்ளிகள் குறித்து பேச உத்தரவு

 

வரும் 26ல் நடக்கும் கிராம சபை கூட்டத்தில், அரசு பள்ளிகளின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேச வேண்டும் என, பள்ளிக்கல்வி அதிகாரிகள், ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.குடியரசு தினத்தையொட்டி, 26ம் தேதி, அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும். இதில், கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய தலைவர், துணை, உறுப்பினர்கள், தொகுதி எம்.எல்.ஏ.,க்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் உள்ளாட்சி துறை அலுவலர்கள் பங்கேற்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது.


இந்த கூட்டங்களில், பள்ளிக்கல்வி சார்பில், அதிகாரிகள் அல்லது உள்ளூர் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கட்டாயம் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஊராட்சி பகுதிகளில், அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவது, கட்டமைப்பை உருவாக்குவது, மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது, பள்ளி வளாக துாய்மை பணிகள் போன்றவை குறித்து, ஆசிரியர்கள் பேச வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது.

5 comments:

  1. இதுவரை பள்ளிக்கு தேவையான ஒரு சிறு உதவி கூட ஊராட்சியின் மூலம் கிடைக்கவில்லை. பிறகு என் ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும். தங்கள் சொந்த செலவிலேயே தலைமை ஆசிரியர்கள் அனைத்து 0அணிகளையும் செய்துகொள்கிறார்கள். இது அரசுக்கு தெரியாதா ?

    ReplyDelete
  2. Sorry ஏன் , பணிகளையும்

    ReplyDelete
  3. தலைமை ஆசிரியர்களுக்கு வேறு வேலை இல்லையா? கற்பித்தல் பணியை தவிர்த்து பிற பணிகளை ஏன் வழங்குகிறீர்கள் ஆசிரியர்களுக்கு?


    ReplyDelete
    Replies
    1. Incentive, Gpf etc எல்லாம் கேட்டா நாங்க இப்படி தான் திசை திருப்புவோம் 😆😆😆

      Delete
  4. மாணவர்களின் ஒழுங்கீனமான செயல்களை கண்டிக்கவும். எட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் சை ஒழித்தால் போதும் பள்ளிகள் சீரமைப்பு செய்துவிடலாம்...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி