பிபிஏ, பிசிஏ படிப்பு அங்கீகாரம் பெற விண்ணப்பம்; 100 உதவி மையங்கள் அமைப்பு: ஏஐசிடிஇ தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 14, 2024

பிபிஏ, பிசிஏ படிப்பு அங்கீகாரம் பெற விண்ணப்பம்; 100 உதவி மையங்கள் அமைப்பு: ஏஐசிடிஇ தகவல்

பிபிஏ, பிசிஏ படிப்புகளுக்கு அங்கீகாரம் பெறுவதற்கான விண் ணப்பங்களை சமர்ப்பிக்க நாடு முழுவதும் 100 உதவி மையங்களை ஏஐசிடிஇ ஏற்படுத்தியுள்ளது.


இதுகுறித்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ) வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:


புதிய நடைமுறை: 2024-27-ம் கல்வியாண்டுக்கான பிபிஏ, பிஎம்எஸ், பிசிஏ படிப்புகளை வழங்கும் உயர்கல்வி நிறுவனங்கள் ஏஐசிடிஇ அனுமதி பெறும் நடைமுறை உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறு அனுமதி பெற்றால் மட்டுமே ஏஐசிடிஇயின் திட்டங்கள் மற்றும் அதன் பலன்களைப் பெற முடியும்.


இதுதவிர ஏற்கெனவே பிபிஏ, பிசிஏ, பிஎம்எஸ் படிப்புகளுடன் இயங்கும் கல்வி நிறுவனங்கள், அனுமதிகோரி ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வசதியாக நாடு முழுவதும் 100 உதவி மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன.


இந்த மையங்களின் பட்டியல், தொடர்பு விவரங்கள், விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் பட்டியல் ஆகியவற்றை www.aicte.india.org என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். இதை கல்வி நிறுவனங்கள் பயன்படுத்திக்கொண்டு அவர்களுக்கான செயல் முறையை சரியான நேரத்தில் முடிக்க வேண் டும்.


அதேநேரம் மத்திய, மாநில அரசு பல்கலைக்கழகங்கள் இந்த அனுமதியை பெற தேவையில்லை. எனினும், ஏஐசிடிஇயின் திட்டங்களை பெற விரும்பினால் மட்டும் அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி