10-ம் வகுப்பு செய்முறைத் தேர்வு: மாநிலம் முழுவதும் இன்று தொடங்குகிறது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 23, 2024

10-ம் வகுப்பு செய்முறைத் தேர்வு: மாநிலம் முழுவதும் இன்று தொடங்குகிறது

 

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வு இன்று (பிப்.23) தொடங்கி 29-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.


தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 26 முதல் ஏப்.8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பொதுத் தேர்வு எழுதவுள்ள 10-ம்வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வுகள் இன்று (பிப்.23) தொடங்கி 29-ம் தேதி வரை நடைபெற உள்ளன.


மாநிலம் முழுவதும் சுமார் 9.7 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வில் பங்கேற்க உள்ளனர். இதற்காக அனைத்து பள்ளிகளிலும் செய்முறைத் தேர்வுக்கு தேவையான ஆய்வகப் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.


தலைமை கண்காணிப்பாளர்: இந்நிலையில், தேர்வுத்துறை வழங்கியுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி, எவ்வித குளறுபடியுமின்றி பிப்.29-க்குள் செய்முறைத் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும். தேர்வு காலை 9 முதல் 11 மணி வரை, மதியம் 2 முதல் மாலை4 மணி வரை என இருவேளைகளில் நடத்தப்பட வேண்டும்.


தேர்வு நடத்தப்படும் பள்ளியின் தலைமை ஆசிரியரே அந்தமையத்தின் தலைமைக் கண்காணிப்பாளராகச் செயல்பட வேண்டும்.


மேலும், தேர்வில் ஏதேனும் புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் பொறுப்பேற்க நேரிடும். எனவே, கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பன உட்பட அறிவுறுத்தல்களை தேர்வுத் துறை வழங்கியுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி