அகப்பயிற்சி நிறைவு செய்த 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத் தொகை ரூ.1000 வழங்குதல் சார்ந்த வழிமுறைகள் -SPD proceedings - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 7, 2024

அகப்பயிற்சி நிறைவு செய்த 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத் தொகை ரூ.1000 வழங்குதல் சார்ந்த வழிமுறைகள் -SPD proceedings

 
பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்கள் செயல்முறையின் படி அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 10 நாட்கள் அகப்பயிற்சியினை ( Internship ) மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டது.

 அதற்கான நிதி பார்வை 2 யிலுள்ள இவ்வலுவலகக் கடிதத்தின் படி அனைத்து மாவட்டங்களுக்கும் விடுவிக்கப்பட்டது . பார்வை 1 யிலுள்ள செயல்முறையில் தெரிவிக்கப்பட்டதின்படி அகப்பயிற்சியினை நிறைவு செய்துள்ள மாணவர்களுக்கு ஊக்கத்தொகை அவரவர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

 அதன்படி அகப்பயிற்சி நிறைவு செய்த ஒவ்வொரு மாணவருக்கும் ரூ .1000 / - ஊக்கத்தொகையாக அவர்கள் வங்கி கணக்கில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது . இதற்காக அகப்பயிற்சி நிறைவு செய்த 12 ஆம் வகுப்பு மாணவர்களின் வங்கி கணக்கு விவரம் பெறப்பட வேண்டும். மாணவர்களின் வங்கிக்கணக்கு விவரம் மற்றும் அகப்பயிற்சிக்கு சென்ற தொழிற்சாலைகள் / நிறுவனங்கள் வழங்கிய சான்றிதழ்களை tnemis.tnschools.gov.in இணையதளத்தில் பதிவேற்றம் பதிவேற்றம் செய்வதற்கான வழிவகை 1 செய்யப்பட்டுள்ளது.

 இவ்விவரங்களை ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் tnemis.tnschools.gov.in இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் . பதிவேற்றம் செய்வதற்கான வழிமுறைகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

SPD Proceedings - Download here..

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி