பள்ளிகளில் வரும் 2024-25 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை பணிகளை மேற்கொள்ள நிதி விடுவித்து உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 29, 2024

பள்ளிகளில் வரும் 2024-25 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை பணிகளை மேற்கொள்ள நிதி விடுவித்து உத்தரவு.

 

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி: அனைத்து வகை அரசு பள்ளிகளில் வரும் 2024-25 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை பணிகளை மேற்கொள்ளுதல் -நிதி விடுவித்தல் -சார்ந்து மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள்மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறிய முயற்சியால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்க நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் முரட்டு சிறப்பு முயற்சிகளாக இல்லம் தேடிக் கல்வி எண்ணும் எழுத்தும் மற்றும் நான் முதல்வன் திட்டங்களுடன் பிற

முன்னெடுப்புகள் காண தற்காப்பு கலைப் பயிற்சி கல்வி சுற்றலா கல்வி சாரா இணை செயல்பாடுகளான இலக்கிய மன்றம் வினாடி வினா போட்டிகள் கலைத்திருவிழா மற்றும் விளையாட்டுப் போட்டிகள் போன்றவை தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.


பள்ளிகளில் தரமான இலவச கல்வி வழங்கப்படுவதை பொதுமக்கள் அரி அனைவரும் அறியும் வண்ணம் பேனர்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள்


மூலம் விளம்பரப் படுத்துதல் அரசு பள்ளிகளில் காற்றோட்டமான வகுப்பறைகள் குடிநீர் வசதி கழிப்பிட வசதி தமிழ் வழி பெரியவருடன் துவக்கப்பட்டுள்ள ஆங்கில வழித் பிரிவுகள் மற்றும் நன்கு பயிற்சி பெற்ற தகுதியான ஆசிரியர்கள் பணியில் உள்ளனர் என்பதனையும் மாணவர்களுக்கு அரசு வழங்க நலத்திட்டங்கள் சார்ந்தும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிவிப்பின்படி ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை தூண்டி வழங்கப்பட்டு வருவதை எடுத்துக் கோரி விழிப்புணர்வு பேரணை நடத்துதல் பேரணிக்கான முன்னேற்பாடு சார்பான கூட்டம் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் நடத்துதல் பேரணியில் இடம்பெறத்தக்க வழங்கப்பட்ட வாசகங்களுடன் சேர்த்து தேவையான வாசகங்களை தயாரித்தல் மற்றும் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு கிடைக்கும்


முன்னுரிமைகள் தெரிவித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதால் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இன் மாநிலத் திட்ட அலுவலகத்தின் மூலம் 38 மாவட்டங்களுக்கு பள்ளி மேலாண்மை குழு தலைப்பின் கீழ் நிதி ஒதுக்கப்படுகிறது


எனவே இனிதே கொண்டு பார்வையில் காணும் செயல்முறைகளில் வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி 2024 25 ஆம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் அதிகரித்திட அனைத்து அரசு பள்ளிகளின் ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரைகளை அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் வட்டார கல்வி அலுவலர்கள் மூலம் வழங்கிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொடுக்கப்படுகிறார்கள்...


ஒவ்வொரு பள்ளிகளுக்கும் தலா 2000 ரூபாய் கொடுக்கப்படும்..


மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகளை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

👇👇👇👇👇👇👇

Click here to download the proceedings

1 comment:

 1. தமிழக கல்வி துறையில் அவலம்:
  தொடக்க பள்ளிகள் :

  பணக்கார குழந்தைகள் படிக்கும் தனியார் பள்ளிகளில் ஒரு வகுப்புக்கு ஒரு ஆசிரியர். ஏழை மாணவர்கள் படிக்கும் ஈராசிரிய தொடக்க பள்ளிகளில் ஒன்று முதல் மூன்று வகுப்புகளுக்கு ஒரே ஆசிரியர். நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புக்கு ஒரு ஆசிரியர். ஒரு ஆசிரியர் விடுமுறை எடுத்து விட்டால் ஒன்று முதல் 5 வகுப்பு வரை ஒரே ஆசிரியர். கல்வித்தரம் எப்படி இருக்கும்.

  நடுநிலை பள்ளிகள்:

  வசதியானவர் படிக்கும் தனியார் பள்ளிகளில் ஒரு பாடத்திற்கு ஒரு ஆசிரியர். ஆனால் ஏழை மாணவர்கள் படிக்கும் நடுநிலை பள்ளிகளில் ஆங்கில ஆசிரியர் கணக்கு பாடம் கற்பிக்கும் நிலை.
  அரசு பள்ளி மாணவர்களின் தரம் உயர்த்த நமது அரசு முயல வேண்டும். தொடக்க கல்வி என்பது அடிப்படை , இதிலிருந்து நமது சமூக நீதியை முதல்வர் அவர்கள் நிலை நாட்ட வேண்டும்

  ஆசிரியர் சங்கங்கள் மற்றும் ஜாக்டா ஜியோ:

  உங்கள் சம்பளத்திற்கு போராடும் நீங்கள் உங்கள் குழந்தைகளை இது போன்ற பள்ளிகளில் படிக்க வைப்பீர்களா? இந்த சமூக நீதிக்கும் சேர்த்து போராடுங்கள்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி