60,567 பேருக்கு அரசு வேலை; துறை வாரியாக விபரம் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 20, 2024

60,567 பேருக்கு அரசு வேலை; துறை வாரியாக விபரம் வெளியீடு

 

அரசு அறிக்கை:

தமிழக அரசுக்கு பணியாளர்களை தேர்வு செய்யும் பணியானது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம், சீருடை பணியாளர் தேர்வு வாரியம் போன்றவை வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது. வெவ்வேறு துறைகளில் காலி பணியிடங்களுக்காக, ஜன., 2024 ஜனவரி வரை, 27,858 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். 


இதுதவிர, பல்வேறு அரசு துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக, 32,709 பேர் பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.நீதித்துறையில், 5,981 பணியிடங்கள்; பள்ளிக்கல்வித் துறையில், 1,847; வருவாய்த் துறையில், 2,996; மக்கள் நல்வாழ்வுத் துறையில், 4,286; ஊரக வளர்ச்சித் துறையில், 857; உயர்கல்வித் துறையில், 1,300; காவல், நகராட்சி நிர்வாகம், வேளாண்மை, சமூக நலம் உள்ளிட்ட மற்ற துறைகளில், 15,442 பணியிடங்களும், அந்தந்த துறைகளின் வழக்கமான நடைமுறைகளை பின்பற்றி நேரடியாக நிரப்பப்பட்டுள்ளன.


அரசு பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் ஆக உள்ள நிலையில், 60,567 பேருக்கு அரசு பணி வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2 comments:

  1. முதலில் இருப்பதை தேர்தல் வாக்குறுதி யில் கூறியதை செய்ய சொல்லு ங்கள் அதன் பின்பு மற்றவை கிழிக்கலாம

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி